உலகக்கோப்பை-சிறுகதை

நான் சரவணன் எட்டாவது படிக்கிறேன்.எனக்கு கிரிக்கெட்னா ரொம்ப பிடிக்கும் அன்னைக்கு 24ஏப்ரல் 2011 உலககோப்பை இறுதி போட்டி நடந்த நாள். எங்க கிராமம் சின்னது.அங்க நிறைய பேர் வீட்ல டீவி இல்ல. நானும் என் நண்பன் நவினும் எப்படியாவது மேட்ச் பாக்கணும்னு சொல்லிட்டு பாண்டி டீ கடையில போய் உக்காந்துட்டோம். பாத்தா அந்த கடையில லட்டுக்கு மொய்க்கிற ஈ மாதிரி,டீவியை சுத்தி எங்க ஊர் மக்கள். டே!!!நவினு இந்தகூட்டத்தில எங்கடா மேட்ச் பார்க்குறது என்றேன் நான். பொறுமைடா …

பியரும் எமனும்

எப்போவும் போல சனிக்கிழமை வேலை விட்டு வந்தா கொண்டாட்டம் தா.. அப்படி த்தா போன வார சனிக்கிழமையையும் பியர் பாட்டிலோட ஆரம்பமாச்சு..மூணு பேர்.. ஒரு கேஸ்பியர்.. வாங்கி அப்டியே சந்தோசமா மொட்ட மாடியில போய் உக்காந்துட்டோம்.எப்பவும் போல ரமேஷிம்,விக்கியும் கம்மியாத குடுச்சாங்க.. நாந்தா ரொம்ப போதை ஆகிட்டேன். அவனுக்கு கீழே சாப்புட போயிட்டானுங்க. நா மட்டும் மொட்டை மாடியில… என்னடா தலை வலிக்குதேனு கொஞ்சம் அப்டியே மல்லாக்க படுத்தேன். “சித்திர குப்தா கணக்கெல்லாம் சரியா போகுதா… ஓ …

நாளைய விவசாயம்

இங்கே நாம் விவசாயம் செய்து கொண்டிருக்கிறோம்.இந்த உலகத்தின் அவசரநேரத்தில் விவசாயமும் அவசரமாய்  வருமானம் பார்க்கவே இந்த காலத்து விவசாயிகள் எண்ணுவதுண்டு. அது அவர்களின் ஆசைஅல்ல அந்த நிலைமைக்கு தள்ளபட்டுள்ளனர் என்பதே உண்மை.பூச்சிகள் செடிகளை தாக்குவதனால் உண்டாகும் பிரச்சனையைதடுக்கவே செயற்கை மருந்துகள் உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று அதுவே விவசாயத்தை தன் கட்டுபாட்டுக்குள் வைக்கும்அளவிற்கு வளர்ந்துள்ளது.செடி வளர மருந்து,காய் கனிக்க மருந்து,பூ அதிகமாய் விட மருந்து,இதில் இலையை தாக்கும் நோய்க்குமருந்து,களையெடுக்க கூட சோம்பல்தனப்பட்டு மண்ணின் வளத்தை கெடுக்கும் களை கொல்லி மருந்து. இன்னும் எத்தனையோவகைகளால் வெறும் ரசாயனத்தை வைத்தே செய்யும் விவசாயத்தில் விளையும் காயில் சுத்தமான இயற்கை உபாதைகள் மட்டுமா  இருக்கபோகிறது. முன்பெல்லாம் மண்ணில் லேசாக கிண்டினாலே மண்புழுக்கள் கிடைக்கும்.இனி யெல்லாம் அதைஅருங்காட்சியகத்தில் காணும் நிலை தான் வரும் போல் இருக்கிறது.படிப்பறிவு இல்லாத ஏழை விவசாயியை அழகாக பேசிவசப்படுத்தி வியாபாரம் செய்து பணம் பார்க்கிறார்கள் செயற்கை மருந்து கடைக்காரர்கள்.வெறும் இயற்கை உரமான மாட்டு கழிவு,ஆட்டுகழிவு, இதை உரமாய் பயன்படுத்தி சிறப்பான மகசூலில் விவசாயம் செய்துவந்தோம். செயற்கை உரக்கடை வியாபாரிகள்இன்றைய விவசாயிகளின் மனநிலையை புரிந்துகொண்டு விசங்களை செடிகளுக்கு விற்று தள்ளுகிறார்கள்.விவசாயத்தில் வரும்வருமானத்தில் நூறில் எம்பது சதவிகிதம் மருந்துக்கே சென்று விடுகிறது என்பதே உண்மை.அன்று கோணிப்பை  நிறைய தானியம்வைத்து விதைத்தவன் எல்லாம் இன்று கோமனம் கட்டி நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.எதை எதையோ தடுக்கும் அரசு இந்த கொடியசெயற்கை உரகொல்லிகளை தடுக்க நடவடிக்கை ஏன் எடுக்ககூடாது. இப்படியே இந்த கொடிய நிலை தொடருமாயின் நம் விவசாயமண்ணுக்கு பதிலாக பாக்டீரியாக்களையே பார்க்கும் நிலை வரும். மண்ணின் வளமே அந்த விவசாயி தலைமுறையின் வாழ்வைமட்டுமல்லாது ஒட்டுமொத்த மனிதர்களின்உயிரை காப்பாற்ற வழி. கடனுக்கு மருந்து வெள்ளாமை பார்த்து அடைத்து விடலாம் என எண்ணி அளவுக்கு அதிகமாக பணத்தைதொலைத்து எந்த நிலத்தை காப்பாற்ற கடன் வாங்கினோமோ அதே கடன் தான் கைப்பற்றும்.ஒவ்வொரு  தொழிலையும் இந்தகார்ப்ரெட் சுரண்டி திங்கிறது. இப்போது விவசாயத்தையும் அந்த கணக்கில் எடுத்து கொண்டுள்ளது..நாம் உண்ணும் உணவில் பாதிக்குமேலே ரசாயனம் தான் கலந்து உள்ளது.இதை நாம் உண்ணும் போது நமது உடல் சாவதிற்கு தயாராகிறது.நாம் நேசிக்கும் நம் அடுத்ததலைமுறைக்கு நம்மால் நிலத்தை மட்டும் விட்டு செல்லமுடியும்.நல்ல விவசாய நிலத்தை அல்ல. நீங்கள் இயற்கை முறைவிவசாயம் செய்ய துவங்கும் போது தவிர்க்க முடியாத தோல்விவரும். அவ்வளவு சீக்கிரம் மண் கட்டுபாட்டுக்குள் வராது. பிறகுஇயற்கை முறையில் குறைந்த முதலீட்டில் நிறைய லாபம் வரும்.முடிந்த வரையில் செயற்கை உரங்களை தவிர்த்து நாளையதலைமுறையை காப்பாற்றுவோம்.

vidhai -tamil short story

 சிறுகதை-விதை   இன்னைக்கு இருந்து தொடர்ந்து நாலு நாள் லீவு என்னடா பண்ணலாம் விக்கி…மச்சா எங்கயாவது டிரிப் போகலாண்டா ….டே அதெல்லாம் வேணாம்டா குடிச்சுட்டு மட்டையாகலாம்டா….. பாரின் சரக்கு ரெடி பண்றண்டா…டேய் மச்சி கோவா போலாம்டா….இவ்ளோ நேரம் பேசி கிட்டு இருக்குமோம் நீ மட்டும் போன் நோண்டிகிட்டு இருக்க….             எல்லாரும் முதல உங்க போன் எல்லாம் குடுங்கடா…என்று சொல்லி கொண்டே எல்லாரோட போனையும் வாங்கி சுவிச் ஆப் செய்து …

Design a site like this with WordPress.com
Get started