குற்றமும் தண்டனையும் மனிதனின் அக மனதை சோதித்து பார்க்கும் ஒரு நாவல்.ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் தஸ்கோயோவஸ்கி எழுதியது.சுமார் 600 பக்கங்ஙளை கொண்ட இந்த பெரிய நாவலை நான் படிக்க ஐந்து நாளாயிற்று.
கதையின் நாயகன் ரஸ்கொல்நிகோவ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.
படிப்புக்காக பீட்டர்ஸ்பெர்க் நகரில் தங்கி இருப்பவன்.குடும்ப சூழ்நிலை காரணமாக அவன் படிப்பு தடைகிறது.தனது சுய செலவுக்காக அவனின் உடைமைகளை அடகு வைக்கிறான்.அப்படி அவன் அந்த செயலை செய்யும் அடகுபொருளை வாங்கி வைக்கும் நாசகார கிழவியை அவனுக்கு பிடிக்கவில்லை.மேலும் அங்கு உள்ள பொருளை அவன் திருட வேண்டுமென தோன்றுகிறது.திடிரென ஒரு நாள் அந்த கிழவியை கோடாரியால் கொன்றுவிட்டு மேலும் உடனிருந்த கிழவியின் அப்பாவி தங்கையும் கொன்று நகையை எடுத்து தப்பிக்கிறான்.இந்த கொலைக்கு பின்பான அவன் மனநிலை,தான் செய்தது சரி தான் என அவனுக்குள் அவன் உருவாக்கி வைத்திருக்கும் கொள்கை மேலும்
எப்படி இவர்களிடமிருந்து தப்பிப்பது என்பது பற்றிய பல குழம்பிய சிந்தனையோடு மனதை துன்புறுத்திக்கொள்ளும் நாயகனின் கதை தான் இது.இதை கதை என்பதை சொல்வதை விட
குற்றம் செய்பவர்களின் மனதின் உளவியல் ஆராய்ச்சி எனக் கூட சொல்லலாம்.
ஒரு தீய குணம் கொண்ட பெண்ணை கொன்று விட்டமே அதனால் என்ன தப்பு,நான் சமுகத்திற்கு நல்லது தானே செய்திருக்கிறேன் என ஒரு பக்கம் புலம்பினாலும்,அவனின் மனம் குற்றத்தை மறக்க தவிக்கிறது.மேலும் நாயகனின் தங்கை துனியாவின் காதாப்பாத்திரம் மெய்சிலிர்க்க வைக்கிறது.தனது சகோதரனின் மீது அவள் கொண்டுள்ள அன்பு, ஒரு காம கொடுரனிடமிருந்து தன்னை காப்பாற்றிகொள்ள அந்த சிறுமி படும்பாடு நம்மை கண் கலங்க வைக்கிறது.ஒரு குடிகாரனின் ஊதாரியின் குடும்பத்தில் மகளாக பிறந்த சோனியா தன் அம்மாவையும், உடன் பிறந்தோரையும் காக்க
அவள் விலைமாதுவாய் மாறுவது மேலும் அவள் விலைமாதுவாக இருந்தாலும் பல நல்ல பண்புகளால் திகழ்பவளாக தஸ்கோயோவஸ்கி சித்தரித்திருப்பது நமக்கு மெய்சிலிர்பூட்டுகிறது.
ரஸ்கொல்நிகொவ் தனது சிறிய அறையில் தன்னை தானே வருத்திக்கொள்ளும் அகப்போராட்டம் நம்மை பதட்டமடைய செய்கிறது.
குற்றம் செய்யப்படுகிறது சூழ்நிலையை சார்ந்தது.

உலகில் நல்லவர்கள் கெட்டவர்கள் என சொல்வதெல்லாம் வெறும் வேம் என நிறுபிக்கிறார்.மேலும் சாதாரணமாணவன் வேடிக்கை பார்ப்பவன்.எதையும் செய்ய துணிபவனே அது (கொலையாகினும்)அவனே தலைவனாகிறான்.என நெப்போலியனை உதாரணமாக காட்டுகிறார்.எந்த ஒரு கொள்கையும் உணர்வின் முன்பு மாய்ந்துவிடும் என்பதே கதையின் நீதி.பொதுவாக இந்த நாவலில் வரும் பெண் கதாப்பாத்திரங்கள் வாழ்வில் பெண்படும் பாடை சித்தரிக்கிறது.உதாரணமாக சோனியாவின் தாயார் காதாப்பாத்திரம் தனது கணவனை இழந்து அந்த குடும்பத்தை காக்க போராடும் குணமும் சில பைத்தியகாரத்தனமும்,காசநோயால் அவள் அவதிப்பட்டு இறந்து போவதும் வேதனையான நிகழ்வாக இருக்கிறது.
சோனியாவின் வாழ்வு அவள் காதாநாயகனின் மீது கொள்ளும் காதல் அத்தனையும் வைத்துப்பார்க்கும் போது சமுகத்தில் நாம் யாரை தீயவர்கள் என வெறுக்கிறோமோ அவர்களின் நன்மதிப்பை சுட்டிக்காட்டுகிறது.இந்த புத்தகம் உளவியல் ரிதியாக ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பெரும் பொக்கிஷம் எனலாம்.மேலும் கதையும் அதை அகமனதில் அமர்ந்து ஒவ்வொரு காதாப்பாத்திரத்தின் மூலம் தஸ்தோயோவெஸ்கி விவரிக்கும் விதமும் ஒரு சிறந்த அனுபவத்தையும்
வாழ்விற்கான வித்யாசமான புரிதலையும் கற்பிக்கிறது.இந்த நாவல் சமுகத்தின் மீதான என் பார்வையை கொஞ்சம் புரட்டிப்போட்டிருக்கிறது என கூட சொல்லலாம்.

Published by sibi saravanan

இதயம் சொல்வதை இறுக பிடித்து எழுதி தொலைக்கிறேன் ......

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started