கோயில்கள் பற்றி எனக்கு எப்போதும் நிறைய சந்தேகங்கள் இருந்ததுண்டு.ஏனென்றால் நான் அவ்வளவாக கோவிலுக்கு போக விரும்பாதவன் தான் .மன்னர்கள் ஏன் இவ்வளவு கோவில்களை கட்டி வைத்திருக்கிறார்கள்.எதற்க்கு அந்த கோவில்களுக்கு இவ்வளவு செலவு போன்ற கேள்விகள் எனக்குண்டு.இதோ அதற்கான பதிலை நானே தேடி கொள்ள வேண்டினேன்.ஆம் அப்படி நான் தெரிந்து பூரித்து போன விஷயங்களை பற்றி தான் இன்று உங்களோடு பேச வந்திருக்கிறேன்.

கோயிலின் பொருள்

     கோயில் என்பதை  இரண்டாக பிரிக்கலாம். கோ என்றால் மன்னன் ,இல் என்றால் இல்லம் மன்னனின் இல்லம் என்பதே பொருள். கோவில் என்பது வெறும் தெய்வ வழிபாட்டுக்காக நமது முன்னோர்கள் உருவாக்கவில்லை.ஒரு நாட்டின் கலை ,அரசியல் ,அரசாங்கம் ,தானிய சேமிப்பு ,அரசபை ,சேமிப்பு கிடங்கு ,மக்கள் பாதுகாப்பு  எல்லாமே கோவில்கள் தான்.

மன்னர்களின் கோயில்            

   பொதுவாக ஒரு மன்னன் ஒரு நாட்டை கைப்பற்றி விட்டால் உடனே அந்த நாட்டில் கோவில் எழுப்பும் வேலையை செய்ய சொல்வான் .அந்த கோவிலில் அவனின் போர் சாதனைகளும் ,போரில் அவனின் வீரமும் அந்த மன்னனின் கலாசாரமும் ,கல்வெட்டுகளில் பொறிக்கப்படும் எதற்க்காக இதை செய்கிறான் என்றால் அடுத்த தலைமுறை மக்கள் அந்த மன்னனின் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். உதாரணமாக ராஜ ராஜ சோழன் பல நகரங்களை வென்று அவன் கைவசம் வைத்திருப்பான். தமிழகத்தின் இன்றியமையாத மன்னன் அவனாகத்தான் இருக்கமுடியும்.கங்கையை வென்றதால் அவன் அங்கேயே கங்கை கொண்ட சோழபுரம் என கோவிலை எழுப்பினான்.இப்படி  சோழவம்சம்

தமிழகத்தில் மட்டுமில்லாது உலகத்தின் எல்லா முலையிலும் கோவில்களை நிறுவியுள்ளது.

வீரக்கல்

                             கோவிலென்பது கலையை வளர்க்கவும் முக்கிய இடமாக விளங்கின.பரத நாட்டியம் எப்பொதும் கோவில்களில் வைத்தே  கற்பிக்கப்பட்டது. அது மட்டும் இன்றி ஒரு மன்னன் இறந்து விட்டால் அவரது சம்மதிக்கும் கோவில் எழுப்பப்படும் அதற்க்கு வீரக்கல் என்ற பெயர் உண்டு.உத்தம சோழன் ,சுந்தர சோழன் போன்றவர்கள் இறந்த போது அவர்கள் நினைவாக கோவில்கள் எழுப்ப பட்டுள்ளள .மேலும் கணவன் இறந்த துக்கத்தில் உடன்கட்டை ஏறும் மனைவிகளுக்கும் கோவில் எழுப்பபடுகிறது .வெற்றி பெற்ற மன்னர்களின் போர் வடிவ சிலை கோவிலில் செதுக்க படுகிறது .

அரசியலுக்காக கோயில்

                  குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் அவர்களின் அரசியல் முறை மற்றும் அரசின் ஆணை போன்றவை கோவில் கல்வெட்டுகளில் பொறிக்க பட்டிருக்கும். அப்படி பொதுவான இடத்தில் வரும் மக்கள் அதை படித்து தெரிந்து கொள்வார்கள். கோவில்களில் மக்களுக்கான பொது கூட்டங்கள் நடைபெறும் .குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு  முறை நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மக்கள் கலந்து கொண்டு அவர்களின் நிதி பிரச்னையை சொல்லி அரசிடம் மானியம் பெறலாம் .அளவுக்கு அதிகமான தானியங்கள் இருந்தால் அவற்றை சேமிக்கலாம்

கும்பாபிஷேகம்

                            கும்பாபிஷேகம் ஏன் நடை  பெறுகிறது. மக்கள் பஞ்சத்திலோ வெள்ளத்திலோ பாதிக்க படும் பொது அவர்கள் அடித்து மண்ணில் விதைக்க தேவையான தானியங்கள் கோவிலின் கலசத்தில் உச்சியில் சேமித்து வைக்க படும் .மேலும் அவை இடியால் பாதிக்கப்படாதவாறு செம்பு கலசத்தில் வைக்க படும்.அவை இடியில் இருந்து அந்த தானியங்கள் மற்றும் கோவில் காக்க பயன்படுகிறது .மேலும் வெள்ளத்தில் மக்கள் பாதிக்க படும் பொது அவர்கள் பாதுகாப்பாக தங்கி கொள்ள பல கோவில் மண்டபங்கள் உதவி இருக்கின்றன.

கோயிலின் வகைகள்

             கோயில்கள் பலவாறு கட்டப்பட்டன. கட்டட அமைப்பை ஒட்டியும் இவை பலவாறு பெயர் பெற்றன. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அப்பர் பெருமான் அவர் தன் பதிகத்தில் பலவிதமான கோயில்களைப் பாடியிருக்கிறார்.

                      இத்துடன் பூங்கோயில், தூங்கானைமாடம் முதலிய கோயில்களையும் அப்பெரியார் குறிக்கிறார். குடிசையைப் போன்ற கோயில்களுக்கு ‘குடிசைக்கோயில் என்றும், கருவறை கீழ்த்தளத்தில் இல்லாமல் மேல்தளத்தில் இருக்கும் கோயில்களுக்கு மாடக்கோயில்கள் என்றும், தூங்குகிற யானையைப் போன்ற அமைப்புடைய கோயில்களுக்குத் ‘துங்கானைமாடம் என்றும் பெயர். விமானங்களின் சிகர அமைப்பைக் கொண்டு திராவிடம், வேசரம், நாகரம் என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர். விமானங்களின் மேலுள்ள சிகரங்கள் எட்டுப் பட்டைகள் உடையவையாயின் அவற்றிற்கு திராவிட சிகரம் என்று பெயர். நான்கு பட்டையுடையதாயின் நாகரம் என்றும், வட்டமாக இருப்பின் வேசரம் என்றும் அழைப்பர். இந்தியாவின் வடபகுதியில் உள்ள கோயில் அமைப்பை நாகரம் என்றும் தென்பகுதியில் உள்ளதைத் திராவிடம் என்றும் இடையில் உள்ளதை வேசரம் என்றும் சில நூல்கள் குறிக்கின்றன.

                      இப்படிதான்  சில பதில்கள் மூலம் எனது கேள்வி அர்த்தம் பெற்றன .நாம் என்ன பண்றோம் கோவிலுக்கு போரோம் போட்டு வைக்கிறோம் ,பொங்கல் வாங்கிசாப்பிடுரோம் ஆனா அதுக்கு பின்னாடி இவ்வளோ விஷயம் இருக்குனு நம்ம மக்களுக்கு தெரியாது. அடுத்த முறை கோவிலுக்கு போன நா சொன்ன விஷயங்களை கோயிலோட ஒப்பிட்டு பாருங்க நம்ம முன்னோர்களோட அறிவு நம்மல புல்லரிக்க வைக்கும் .

Published by sibi saravanan

இதயம் சொல்வதை இறுக பிடித்து எழுதி தொலைக்கிறேன் ......

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started