இயற்கையை தேடி

#எல்லாம்இயற்கையே பசுமை புரட்சிக்கு முன்பாக என் பாட்டனும்,முப்பாட்டனும் உணவு உற்பத்தியை தனது எளிமையான வாழ்வியலுக்காக செய்து வந்தான்.ஆனால் உலக பசுமைபுரட்சிக்கு பின் ராசாயன முறையில் அதிக உற்பத்தியை உருவாக்குகிறேன் என சொல்லிக்கொண்டு எம் மக்களுக்கு விசத்தை உற்பத்தி செய்து தருகிறோம்.இதனால் இளம் வயதிலே பெண் குழந்தைகள் பூப்பெய்தல்,உடல் கொழுப்பு அதிகரித்தல் புற்றுநோய் பாதிப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகி கிடக்கிறது சமுகம்.தலைமுறையாக திராட்சை உற்பத்தி செய்து வரும் எங்கள் ஊர் மக்கள் அதிக சம்பாத்தியம் வேண்டும் எனும் …

குற்றமும் தண்டனையும்

குற்றமும் தண்டனையும் மனிதனின் அக மனதை சோதித்து பார்க்கும் ஒரு நாவல்.ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் தஸ்கோயோவஸ்கி எழுதியது.சுமார் 600 பக்கங்ஙளை கொண்ட இந்த பெரிய நாவலை நான் படிக்க ஐந்து நாளாயிற்று. கதையின் நாயகன் ரஸ்கொல்நிகோவ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன். படிப்புக்காக பீட்டர்ஸ்பெர்க் நகரில் தங்கி இருப்பவன்.குடும்ப சூழ்நிலை காரணமாக அவன் படிப்பு தடைகிறது.தனது சுய செலவுக்காக அவனின் உடைமைகளை அடகு வைக்கிறான்.அப்படி அவன் அந்த செயலை செய்யும் அடகுபொருளை வாங்கி வைக்கும் நாசகார கிழவியை அவனுக்கு …

பூனாச்சி புத்தக விமர்சனம்

பூனாச்சி ஒரு வெள்ளாட்டின் கதை அதை நான் பேசித்தான் ஆக வேண்டும்.ஆம் அந்த கதையை எழுதிய பெருமாள் முருகன் ஐய்யாவுக்கு கோடி கும்புடு. மனுசேன் அணுவணுவா ஆடுகளையும் ஆட்டு மந்தையும் கவனுச்சு எழுதிருக்கார்.மேலும் முக்கியமான விசயம் ஆடைகளுக்கு பெயரெல்லாம் வைத்து ஒரு ஆவணத்தை உருவாக்கியுள்ளார் என சொல்லலாம். மந்தையில் ஆடோட்டி சொல்பவர்களிலிருந்து,அதன் புணர்ச்சி முறைகளில் இருந்து ,ஆட்டுக்கு உடை அடைப்பவனுக்கும் இடையான மனிதத்தை அவர்களின் வாழ்வு முறையையும் ஒரு கிராமத்தானாய் இருந்தும் நான் தெரிந்து கொள்ளாதவையை எழுத்தாளர் …

நானும் இஞ்சினியர் தா 4 தொடர் கதை

சரி நானே இப்படி பேசிக் கொண்டிருந்தால் எப்படி!!!!!கொஞ்சம் மித்ரனும் உங்களோடு பேசட்டும் என நினைக்கிறான். வணக்கம் பாஸ்,நட்பு அப்டிங்கிறது உலகத்தில எதையும் எதிர்பாக்காம இந்த மனுசங்களுக்கு கிடைக்கிற வரம்.அப்டி பட்ட வரத்தை யாரும் வேணானும் சொல்லவும் முடியாது அனுபவிக்காம இருக்கவும் முடியாது. இன்னைக்கு எங்க காலேஜ் முடியிற நாள் ஆமா எந்த வித கவலையுமில்லாம கடத்துன காலம் முடிவுக்கு வரப்போற நாளுனு சொல்லலாம்.நான் என்னோட இத்துப்போன பாயை தூக்கி எறிஞ்சிட்டு எல்லா பொருளையும் எடுத்து வைச்சிட்டிருந்தேன்.துருவனுக்கும் ராகுலுக்கும் …

பிரமீள்

பிரமீள் எனும் கவிதை ஆளுமையை பற்றித்தான்உங்களோடு நான் பேச வந்தேன்.நீங்கள் நினைக்கும் அளவிற்கு நான் படிக்கவில்லை.இருந்தும் சில படைப்புகளை படித்திருக்கிறேன்.பிரமீள் ஒரு இலங்கை தமிழர்.சிறு வயதிலயே தமிழகத்தில் குடிவந்தவர் அவர்.இவரின் தூரிகையில் வரைந்த ஓவியமும் சரி,எண்ண தூரிகையில் சிதறிய வண்ண கவிதைகளும் சரி சில குழப்பிய மன நிலையோடு உங்களுக்குள் புகுந்தாலும் அதன் பாதிப்பென்பதுஅகச்சிறந்தது.சில மரபு கவிஞர்கள் புதுக்கவிதைகளை எள்ளி நகையாடிய காலத்தில்இவரின் கவிதைகள் அவர்களுக்கு பதிலடியாய் இருந்தது.செல்லப்பாவின் எழுத்து பத்திரிக்கையில் இவருக்கென தனி அங்கிகாரமுன்று.பிரமீளின் கவிதைகள் …

தீரன் சின்னமலை வரலாறு

இன்றைய ஈரோடு மாவட்டத்தில்காங்கயம் வட்டம் சென்னிமலைஅருகிலுள்ள செ.மேலப்பாளையம்என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர்.அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர்(பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார். தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் …

கண்டாங்கி

எப்போதும் போல் சென்ரலுக்கு போகும் பஸ்க்காக நகுலன் அங்கே வருவதுண்டு.பண்ணாட்டு கார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அவனுக்கு சொந்த ஊரோ வேறு.பசிக்கும் உழைப்புக்கும் வேறு வேறு அர்த்தமில்லை என அவனின் ஒடுக்கு விழுந்த முகம் சொல்லிவிடும் படியே இருந்தது.மணி ஒன்பதுக்கெல்லாம் வந்து விடும் பஸ் இன்னும் வந்து சேரவில்லை.சென்னையை பொருத்த வரை சரியான நேரத்திற்கு சரியான முறையில் போய் நிற்க முடியாதென்னது தெரிந்த சமாச்சாரம் தானே..பத்து மணி வேலைக்கு 9.30க்கு போய் கொண்டிருந்தவன் இப்போதெல்லாம் 9.00 மணிக்கு …

நானும் இஞ்சினியர் தா…(3)

அன்று கொஞ்சம் மேகம் அழுதுகொண்டே பூமியை அழகாக்கி கொண்டிருந்தது. வகுப்பறையின் ஜன்னல்கள் சாரல்களை உள்ளே தெளித்து விளையாடின.எப்போதும் பிச்சை காரனின் தட்டைபோல் சத்தமிடும் அந்த அறை இவ்வளவு பேரமைதியாக இருப்பது எப்போதாவது தான்.அதன் அமைதிக்கு பின்னால் எத்தனை வலிகளோ…மாணவர்கள் கரும்பலகையை பார்த்த வாரே கடந்த கல்லூரிகாலத்தை நினைத்துகொண்டிருக்கலாம்.பிரியா விடை என வரையப்பட்ட பலகையில் அப்படி என்னதான் இருக்குமோ இப்படி பார்க்கிறார்கள்.டக்…டக்… என ஷீ சத்தம்.”ஆண்ரோ”சார் உள்ளே வந்தார். இவர்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர். “ஹாய்…காய்ஸ்…”அங்கே ஒரே அமைதி …

கோவில்களில் அப்படி என்ன தா இருக்கோ????

கோயில்கள் பற்றி எனக்கு எப்போதும் நிறைய சந்தேகங்கள் இருந்ததுண்டு.ஏனென்றால் நான் அவ்வளவாக கோவிலுக்கு போக விரும்பாதவன் தான் .மன்னர்கள் ஏன் இவ்வளவு கோவில்களை கட்டி வைத்திருக்கிறார்கள்.எதற்க்கு அந்த கோவில்களுக்கு இவ்வளவு செலவு போன்ற கேள்விகள் எனக்குண்டு.இதோ அதற்கான பதிலை நானே தேடி கொள்ள வேண்டினேன்.ஆம் அப்படி நான் தெரிந்து பூரித்து போன விஷயங்களை பற்றி தான் இன்று உங்களோடு பேச வந்திருக்கிறேன். கோயிலின் பொருள்      கோயில் என்பதை  இரண்டாக பிரிக்கலாம். கோ என்றால் மன்னன் ,இல் …

நானும் இஞ்சினியர் தான்-அக்னிமித்ரன் -2

இருள் கல்லூரியின் விடுதியை விசாரித்துகொண்டிருக்கிறது.கட்டமாக வரிசையாக அறைகளின் அணிவகுப்பை கொண்ட விடுதியின் நடுவே வாலிபால் விளையாடிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம். மாலையில் வீடு வந்து சேர்ந்த காகாங்களின் கூச்சத்தை போல ஒரே சலசலப்பு.வாழ்வின் மறக்க முடியாத நினைவுகளை தரக்கூடிய நாட்கள் அவை.அறை எண் 307ல் மித்ரன் தனெக்கே அடையாளமான கட்டம்போட்ட லுங்கியை கண்டிக்கொண்டு ஒட்டை விழுந்த வெள்ளைபனியனை ஒடுங்கிய மார்பால் மறைத்து அவனில் இரும்பு கட்டிலில் பாயை விரித்து உக்காந்திருக்கிறான். “ஹாய் மாம்..ஐ காட்ட ஜாப் இன் அசஞ்சர் …

Design a site like this with WordPress.com
Get started