Featured

கோவில்களில் அப்படி என்ன தா இருக்கோ????

கோயில்கள் பற்றி எனக்கு எப்போதும் நிறைய சந்தேகங்கள் இருந்ததுண்டு.ஏனென்றால் நான் அவ்வளவாக கோவிலுக்கு போக விரும்பாதவன் தான் .மன்னர்கள் ஏன் இவ்வளவு கோவில்களை கட்டி வைத்திருக்கிறார்கள்.எதற்க்கு அந்த கோவில்களுக்கு இவ்வளவு செலவு போன்ற கேள்விகள் எனக்குண்டு.இதோ அதற்கான பதிலை நானே தேடி கொள்ள வேண்டினேன்.ஆம் அப்படி நான் தெரிந்து பூரித்து போன விஷயங்களை பற்றி தான் இன்று உங்களோடு பேச வந்திருக்கிறேன்.

கோயிலின் பொருள்

     கோயில் என்பதை  இரண்டாக பிரிக்கலாம். கோ என்றால் மன்னன் ,இல் என்றால் இல்லம் மன்னனின் இல்லம் என்பதே பொருள். கோவில் என்பது வெறும் தெய்வ வழிபாட்டுக்காக நமது முன்னோர்கள் உருவாக்கவில்லை.ஒரு நாட்டின் கலை ,அரசியல் ,அரசாங்கம் ,தானிய சேமிப்பு ,அரசபை ,சேமிப்பு கிடங்கு ,மக்கள் பாதுகாப்பு  எல்லாமே கோவில்கள் தான்.

மன்னர்களின் கோயில்            

   பொதுவாக ஒரு மன்னன் ஒரு நாட்டை கைப்பற்றி விட்டால் உடனே அந்த நாட்டில் கோவில் எழுப்பும் வேலையை செய்ய சொல்வான் .அந்த கோவிலில் அவனின் போர் சாதனைகளும் ,போரில் அவனின் வீரமும் அந்த மன்னனின் கலாசாரமும் ,கல்வெட்டுகளில் பொறிக்கப்படும் எதற்க்காக இதை செய்கிறான் என்றால் அடுத்த தலைமுறை மக்கள் அந்த மன்னனின் வரலாறை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். உதாரணமாக ராஜ ராஜ சோழன் பல நகரங்களை வென்று அவன் கைவசம் வைத்திருப்பான். தமிழகத்தின் இன்றியமையாத மன்னன் அவனாகத்தான் இருக்கமுடியும்.கங்கையை வென்றதால் அவன் அங்கேயே கங்கை கொண்ட சோழபுரம் என கோவிலை எழுப்பினான்.இப்படி  சோழவம்சம்

தமிழகத்தில் மட்டுமில்லாது உலகத்தின் எல்லா முலையிலும் கோவில்களை நிறுவியுள்ளது.

வீரக்கல்

                             கோவிலென்பது கலையை வளர்க்கவும் முக்கிய இடமாக விளங்கின.பரத நாட்டியம் எப்பொதும் கோவில்களில் வைத்தே  கற்பிக்கப்பட்டது. அது மட்டும் இன்றி ஒரு மன்னன் இறந்து விட்டால் அவரது சம்மதிக்கும் கோவில் எழுப்பப்படும் அதற்க்கு வீரக்கல் என்ற பெயர் உண்டு.உத்தம சோழன் ,சுந்தர சோழன் போன்றவர்கள் இறந்த போது அவர்கள் நினைவாக கோவில்கள் எழுப்ப பட்டுள்ளள .மேலும் கணவன் இறந்த துக்கத்தில் உடன்கட்டை ஏறும் மனைவிகளுக்கும் கோவில் எழுப்பபடுகிறது .வெற்றி பெற்ற மன்னர்களின் போர் வடிவ சிலை கோவிலில் செதுக்க படுகிறது .

அரசியலுக்காக கோயில்

                  குறிப்பிட்ட பகுதியில் வாழும் மக்கள் அவர்களின் அரசியல் முறை மற்றும் அரசின் ஆணை போன்றவை கோவில் கல்வெட்டுகளில் பொறிக்க பட்டிருக்கும். அப்படி பொதுவான இடத்தில் வரும் மக்கள் அதை படித்து தெரிந்து கொள்வார்கள். கோவில்களில் மக்களுக்கான பொது கூட்டங்கள் நடைபெறும் .குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு  முறை நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மக்கள் கலந்து கொண்டு அவர்களின் நிதி பிரச்னையை சொல்லி அரசிடம் மானியம் பெறலாம் .அளவுக்கு அதிகமான தானியங்கள் இருந்தால் அவற்றை சேமிக்கலாம்

கும்பாபிஷேகம்

                            கும்பாபிஷேகம் ஏன் நடை  பெறுகிறது. மக்கள் பஞ்சத்திலோ வெள்ளத்திலோ பாதிக்க படும் பொது அவர்கள் அடித்து மண்ணில் விதைக்க தேவையான தானியங்கள் கோவிலின் கலசத்தில் உச்சியில் சேமித்து வைக்க படும் .மேலும் அவை இடியால் பாதிக்கப்படாதவாறு செம்பு கலசத்தில் வைக்க படும்.அவை இடியில் இருந்து அந்த தானியங்கள் மற்றும் கோவில் காக்க பயன்படுகிறது .மேலும் வெள்ளத்தில் மக்கள் பாதிக்க படும் பொது அவர்கள் பாதுகாப்பாக தங்கி கொள்ள பல கோவில் மண்டபங்கள் உதவி இருக்கின்றன.

கோயிலின் வகைகள்

             கோயில்கள் பலவாறு கட்டப்பட்டன. கட்டட அமைப்பை ஒட்டியும் இவை பலவாறு பெயர் பெற்றன. சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் அப்பர் பெருமான் அவர் தன் பதிகத்தில் பலவிதமான கோயில்களைப் பாடியிருக்கிறார்.

                      இத்துடன் பூங்கோயில், தூங்கானைமாடம் முதலிய கோயில்களையும் அப்பெரியார் குறிக்கிறார். குடிசையைப் போன்ற கோயில்களுக்கு ‘குடிசைக்கோயில் என்றும், கருவறை கீழ்த்தளத்தில் இல்லாமல் மேல்தளத்தில் இருக்கும் கோயில்களுக்கு மாடக்கோயில்கள் என்றும், தூங்குகிற யானையைப் போன்ற அமைப்புடைய கோயில்களுக்குத் ‘துங்கானைமாடம் என்றும் பெயர். விமானங்களின் சிகர அமைப்பைக் கொண்டு திராவிடம், வேசரம், நாகரம் என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர். விமானங்களின் மேலுள்ள சிகரங்கள் எட்டுப் பட்டைகள் உடையவையாயின் அவற்றிற்கு திராவிட சிகரம் என்று பெயர். நான்கு பட்டையுடையதாயின் நாகரம் என்றும், வட்டமாக இருப்பின் வேசரம் என்றும் அழைப்பர். இந்தியாவின் வடபகுதியில் உள்ள கோயில் அமைப்பை நாகரம் என்றும் தென்பகுதியில் உள்ளதைத் திராவிடம் என்றும் இடையில் உள்ளதை வேசரம் என்றும் சில நூல்கள் குறிக்கின்றன.

                      இப்படிதான்  சில பதில்கள் மூலம் எனது கேள்வி அர்த்தம் பெற்றன .நாம் என்ன பண்றோம் கோவிலுக்கு போரோம் போட்டு வைக்கிறோம் ,பொங்கல் வாங்கிசாப்பிடுரோம் ஆனா அதுக்கு பின்னாடி இவ்வளோ விஷயம் இருக்குனு நம்ம மக்களுக்கு தெரியாது. அடுத்த முறை கோவிலுக்கு போன நா சொன்ன விஷயங்களை கோயிலோட ஒப்பிட்டு பாருங்க நம்ம முன்னோர்களோட அறிவு நம்மல புல்லரிக்க வைக்கும் .

Featured

நகுலனை தொலைத்த இரவுகள் …….

              இணையத்தில் தமிழ் எழுத்தாளர்களை பற்றி பார்க்கும் போது நகுலன் என்ற பெயர் எனக்கு சிக்கி விட்டது. சரி யார் தான் இவர் என தேட தொடங்கினேன்.அவரின் கவிதை நூலை  விரித்து என் மடியின் மீது அமர சொல்லி வாசிக்க துவங்கினேன்.அவரையும்  கவிதையையும் விசாரிக்கத்   துவங்கும் போது வரிகள் நெஞ்சுக்குள் ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மறுத்து அடம் பிடிக்கின்றன . அவை  கொட்டுத்  தாளம் போட்டு என்னை ஏளனம் செய்கின்றன . இப்படி ஒரு கவிஞனை ஏன் விட்டேன் என புலம்பி கொண்டேன்.  நான்…. நான்.. இது எனக்கான உலகம் அதில் நான் உலாவிக்கொண்டு இருக்கிறேன் என்னோடு நான் சண்டை போடும்போது புது புது அர்த்தங்கங்கள் குதிக்கின்றன அதை இழுத்து பிடித்து கழுத்தை நெரித்து கவிதை செய்கிறேன் என்கிறார்  நகுலன் . எனக்கு  பெரும் சந்தேகம் எழுகிறது எனக்கு அவரின் சுயத்தோடு பேசுவதே அவரின் நிதப்பொழுது  போக்குகாக இருக்குமோ என்று  . இவர் கவிதைகள் விமர்சனங்களுக்கு அஞ்சாதவை, இலக்கணத்திடம் கெஞ்சதாவை .இவரின் கவிதைகள் எளிமையான வார்த்தைகளால் ஆனது ஆனால் நெஞ்சுக்குள் நின்று நோண்டிக்கொண்டே ஏதோ ஒரு சாயத்தை அள்ளிபூசி மொழுகக்கூடியவை போதும் நிறுத்தி விடுகிறேன் இன்னும் அந்த உணர்வுகள் விட்டு போனதாய் இல்லை.இதோ அவர் எழுதிய கவிதையில் எனக்கு பிடித்த சில அனல்கங்குகள்

செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
“செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல்”

        *

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
”யார்”
என்று கேட்டேன்
”நான் தான்
சுசீலா
கதவைத் திற “என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?
*

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!
*
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!
*

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
*
மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!
*

எனக்கு
யாருமில்லை
நான்
கூட!

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!

முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!

இதோ இப்படி தான் கொஞ்சமாக எழுதி இருந்தாலும் கொழுத்தும் அர்த்தத்தை கக்கிவிடுவதில் வல்லவராக இருக்கிறார்.ஒவ்வொரு முறை பத்திரிக்கைக்கு கவிதை அனுப்புவர் .பிடிக்க வில்லை என்றால் திருப்பி அனுப்பி விடுங்கள் சும்மா நீங்கள் போடும் வரை என்னால் காக்க முடியாது. என கோபமாக பேசக்கூடியவர். அவரின் கவிதைகளில் தனிமையும் சுசிலாவின் காதலும் மனிதமும் கொட்டிக் கிடக்கிறது. இதோ என் மீதுள்ள தாக்கத்தை தணித்துக் கொள்ளத்தான் உங்களுக்காக  இப்பதிவை தரவிறக்கியுள்ளேன் .

                             
—-அக்னி மித்ரன்

Featured

கிராம சபையை பற்றி அறிவோமே….

            ஒரு நாட்டில் கிராமம் ஒழுங்காக  இருந்தால் தான் அந்த நாடே சிறந்து விளங்கும் என்பார்கள்.ஆம் அது உண்மை தான் இங்கே நகரத்தின் முன்னேற்றமே பெரிதென நாம் உழைத்து கொண்டிருக்கிறோம்.அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என நம்மில் பலருக்கு தெரியவில்லை. 1992 ஆம் ஆண்டு ஒரு சட்டம் இந்தியாவில் பிறப்பிக்கபட்டது.இது  யாருக்கெல்லாம் தெரியும் யென தெரியவில்லை.கிராம சபை யென சொல்வார்கள் அதை மக்கள் அறிந்து கொள்ளத்தான் இதோ இந்த கிராமத்தான் என்னால் முடிந்ததை செய்ய வந்துள்ளேன்.கிராம சபை என்பது ஒரு கிராமத்தின் வளர்ச்சிக்காக உருவாக்கபட்டது.இது வருடத்திற்கு நான்கு முறை நடத்தப்படுகிறது. இதில் கிராமத்தில் உள்ள எல்லா மக்களும் கலந்து கொள்ளலாம். பொதுவாக 50 முதல் 500 பேர் வரை கலந்து கொள்ளலாம்.

இது ஜனவரி 26,ஆகஸ்ட் 15,மே 1,அக்டோபர் 2, போன்ற நாட்களில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் யாரெல்லாம் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்  என கேட்டால் ஊர் கிராம தலைவர்,ஊர் நிர்வாகி,தலையாரி,வார்டு உறுப்பினர்கள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். சரி அடுத்தபடியாக இந்த கூட்டம் முன் கூட்டியே அறிவிப்பு தர வேண்டும். ஆம் அப்படி தராத பட்ச்த்தில் அவர்கள் அறிவிப்பும்   தராமல் ஒரு கிராம சபை கூட்டம் அவர்களுக்குள் நடக்குமாயின் அந்த நிர்வாகத்தின் மீது தக்க முறையில் தாலுகாஅலுவலகத்தில் புகார் தரலாம். 

               இந்த கிராம சபை பொது கூட்டம் அந்த ஊரின் பொதுவான  ஒரு இடத்தில் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் கிராமத்தில் இந்த வருடம் எவ்வளவு செலவாகி உள்ளது .எந்தெந்த திட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது இந்த திட்டத்தின் நிலை மற்றும் வருவாய் விஷயங்கள் கிராம நிர்வாகியால் எடுத்து கூறப்படுகிறது.இதில் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் தீர்வு நடத்தி கொள்ளலாம்.மக்கள் கேட்கும் வரவு செலவு கணக்குகளை சரியாய் அவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது கிராம நிர்வாகியின் கடமை.அடுத்து மக்கள் அவர்களின் பிரச்சனைகளை கூறலாம்.உதாரணமாக தண்ணீர் பிரச்சனை,சாலை பிரச்னை போன்ற பல விஷயங்களை பற்றி பேசலாம். அதற்க்கு .  என்ன என்ன திட்டங்களை வகுக்கலாம் . என மக்கள் சொல்லும் கருத்துக்களும் அங்கே செல்லுபடி ஆகிறது.ஆம் இது மக்கள் ஆட்சியே தனி சர்வாதிகார ஆட்சியோ அல்லது மன்னர் ஆட்சியோ அல்ல அவர்கள் விருப்பத்திற்கு சட்டம் போடா, அது தான் கிராமச் சபையின் முக்கிய கருத்து சுதந்திரம் என கூட சொல்லலாம்.ஊர் மக்கள் கலந்து எடுக்கும் முடிவுகளுக்கு அந்த நிர்வாகம் கண்டிப்பாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் அப்படி கொடுக்காத பட்சத்தில் அது கிராம சபை தலைவர்கள் நீதி மன்றத்தால் மக்களின் கோரிக்கையின் பேரில் தண்டிக்க படலாம். இதில் குளம் தூர்வார்தல் , சாலை பராமரிப்பு , கால் நடை மருத்துவம்,விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வு மழைநீர் சேகரிப்பு ,போன்ற நல்ல நல்ல திட்டங்களை அந்த கிராமத்து இளைய சமுதாயத்தினர் முன் வைக்கலாம். அப்படி நிறைவேற்றப்படாத ஏதேனும் தீர்மானங்கள் இருந்தால் ஊர் மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். அதற்காக மேல் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கி அந்த திட்டம் நடைமுறை படுத்தபடும்.இப்படிபட்ட கிராம சபை பற்றி  அதிகமாக யாருக்கும் தெரியவே இல்லை . கிராமத்து நிர்வாகிகள் அவர்களின் கையாள்களை வைத்து ஏதோ ஒன்று நடந்தது போல அரசாங்கத்திற்கு கணக்குக் காட்டுகிறது. என் நண்பன் சமீபமாக கிராம சபை கூட்டத்தால் கலந்து கொண்டதாகவும், அங்கே சுமார் 12 பேர் மட்டும் கலந்து கொண்டு பேசியதாகவும் சொன்னான். மேலும் அவர்கள் சும்மா ஒரு பாசாங்கிற்கு அந்த கூட்டத்தை நடத்துவது போல் தெரிகிறது என்றும் சொன்னான். அந்த கிராம சபை நடத்த இடத்திற்கு அருகில் இருந்த யாருக்கும் இதை பற்றி தெரியவில்லை என்பது வேதனைக்குரியது .சரி இந்த பதிவின் மூலம் கொஞ்சம் மக்கள் தெரிந்து கொள்ளட்டும் என்பதே என் நோக்கம். இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்ன வென்றால் மக்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் யாராக இருந்தாலும் தரையில் தான் அமர வேண்டும். அது நாட்டின் பிரதமராக இருந்தாலும் சரி இங்கே எல்லாரும் ஒன்று தான்.என் அன்பு சகாக்களே படித்த இளைஞர்களே இது நமது கிராமம் நாம் வாழப்போகும் கிராமம் அதை சில சூட்சம திருடர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பு.இன்னும் எத்தனை நாட்கள் தான் இந்த கார்ப்பரேட் நிறுவனத்தை நம்பி பிழைக்க போகிறோம் . மாற்றத்தை தொடங்குங்கள். அடுத்த கிராம சபை கூட்டத்தில் நமது புரட்சி வார்த்தைகள் உரக்கிப்  பேசட்டும் . நாளைய நல்ல பசுமையான நாடு முன்னேற்றம் காணட்டும்.கிராமம் தான் நாட்டின் தலையெழ்த்தை தீர்மானிக்கிறது.

                                                                                                    இப்படிக்கு அன்போடு    

                                                                                                               அக்னி மித்ரன், 

                                                                                                                                  தேனி. 

                                                                                                      தொடர்ப்புக்கு:6379165176

இயற்கையை தேடி

#எல்லாம்இயற்கையே

பசுமை புரட்சிக்கு முன்பாக என் பாட்டனும்,முப்பாட்டனும் உணவு உற்பத்தியை தனது எளிமையான வாழ்வியலுக்காக செய்து வந்தான்.ஆனால் உலக பசுமைபுரட்சிக்கு பின் ராசாயன முறையில் அதிக உற்பத்தியை உருவாக்குகிறேன் என சொல்லிக்கொண்டு எம் மக்களுக்கு விசத்தை உற்பத்தி செய்து தருகிறோம்.இதனால் இளம் வயதிலே பெண் குழந்தைகள் பூப்பெய்தல்,உடல் கொழுப்பு அதிகரித்தல் புற்றுநோய் பாதிப்பு போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகி கிடக்கிறது சமுகம்.தலைமுறையாக திராட்சை உற்பத்தி செய்து வரும் எங்கள் ஊர் மக்கள் அதிக சம்பாத்தியம் வேண்டும் எனும் முனைப்பில் அளவுக்கு மிஞ்சிய பூச்சிக்கொல்லிகளை அடித்து தள்ளுகின்றனர்.ஒரு கட்டத்தில் பூச்சிக்கொல்லிகளை தவிர அந்த திராட்சை பழத்தில் எப்படி சத்தை உண்பவர்கள் பெற முடியும்.என்ற கேள்வி எனக்கெளுகிறது.மேலும் ராசாயன உரங்கள் மண்ணின் தாது உப்புகளின் குறைபாடை அதிகரிக்க செய்து மண்ணை கெடுக்கிறது.

மனித பாதங்கள் படாத இடங்களே நல்ல உணவை உற்பத்தியாக தகுதியான இடம்.இங்கே விவசாயம் என்பது வியாபாரம் ஆகிவிட்டது.அமெரிக்க ராசாயன கழிவுகளை கொட்டித்தான் நம் மூதாதையர் விவசாயத்தில் சம்பாதித்தார்களா??? இல்லவே இல்லை.
இயற்கையை அதன் போக்கில் விட்டாலே நமக்கு தேவையான ஒன்றை அது கொடுத்துக் கொண்டே இருக்கும். அதை விட்டுவிட்டு அதனிடம் கொலைமிரட்டல் செய்த அதனின் பலிவாங்குதல் மனித குலத்தின் அழிவை நோக்கியே ஈட்டிச்செல்லும்.

எங்கள் ஊர் இளைஞர்கள் நிறைய இதை பற்றி விவாதித்துள்ளோம்.ஆனால் நடைமுறைபடுத்த எங்கள் அப்பாக்கள் முன்வர வில்லை.அதற்காக இயற்கை விவசாயத்தை செய்து காட்டி அவர்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.அடுத்த பத்து ஆண்டுக்குள் எங்களால் ஒரு டன் அளவாவது இயற்கையான முறையில் உணவு உற்பத்தி செய்ய முடியும் என நம்புகிறோம்.
இது நகரவாசிகளாக வேசமிட்டு நடித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கிராமத்தானின் தலையாகிய கடமை ஆகும்.

–சிபிசரவணன்.

குற்றமும் தண்டனையும்

குற்றமும் தண்டனையும் மனிதனின் அக மனதை சோதித்து பார்க்கும் ஒரு நாவல்.ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் தஸ்கோயோவஸ்கி எழுதியது.சுமார் 600 பக்கங்ஙளை கொண்ட இந்த பெரிய நாவலை நான் படிக்க ஐந்து நாளாயிற்று.
கதையின் நாயகன் ரஸ்கொல்நிகோவ் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்.
படிப்புக்காக பீட்டர்ஸ்பெர்க் நகரில் தங்கி இருப்பவன்.குடும்ப சூழ்நிலை காரணமாக அவன் படிப்பு தடைகிறது.தனது சுய செலவுக்காக அவனின் உடைமைகளை அடகு வைக்கிறான்.அப்படி அவன் அந்த செயலை செய்யும் அடகுபொருளை வாங்கி வைக்கும் நாசகார கிழவியை அவனுக்கு பிடிக்கவில்லை.மேலும் அங்கு உள்ள பொருளை அவன் திருட வேண்டுமென தோன்றுகிறது.திடிரென ஒரு நாள் அந்த கிழவியை கோடாரியால் கொன்றுவிட்டு மேலும் உடனிருந்த கிழவியின் அப்பாவி தங்கையும் கொன்று நகையை எடுத்து தப்பிக்கிறான்.இந்த கொலைக்கு பின்பான அவன் மனநிலை,தான் செய்தது சரி தான் என அவனுக்குள் அவன் உருவாக்கி வைத்திருக்கும் கொள்கை மேலும்
எப்படி இவர்களிடமிருந்து தப்பிப்பது என்பது பற்றிய பல குழம்பிய சிந்தனையோடு மனதை துன்புறுத்திக்கொள்ளும் நாயகனின் கதை தான் இது.இதை கதை என்பதை சொல்வதை விட
குற்றம் செய்பவர்களின் மனதின் உளவியல் ஆராய்ச்சி எனக் கூட சொல்லலாம்.
ஒரு தீய குணம் கொண்ட பெண்ணை கொன்று விட்டமே அதனால் என்ன தப்பு,நான் சமுகத்திற்கு நல்லது தானே செய்திருக்கிறேன் என ஒரு பக்கம் புலம்பினாலும்,அவனின் மனம் குற்றத்தை மறக்க தவிக்கிறது.மேலும் நாயகனின் தங்கை துனியாவின் காதாப்பாத்திரம் மெய்சிலிர்க்க வைக்கிறது.தனது சகோதரனின் மீது அவள் கொண்டுள்ள அன்பு, ஒரு காம கொடுரனிடமிருந்து தன்னை காப்பாற்றிகொள்ள அந்த சிறுமி படும்பாடு நம்மை கண் கலங்க வைக்கிறது.ஒரு குடிகாரனின் ஊதாரியின் குடும்பத்தில் மகளாக பிறந்த சோனியா தன் அம்மாவையும், உடன் பிறந்தோரையும் காக்க
அவள் விலைமாதுவாய் மாறுவது மேலும் அவள் விலைமாதுவாக இருந்தாலும் பல நல்ல பண்புகளால் திகழ்பவளாக தஸ்கோயோவஸ்கி சித்தரித்திருப்பது நமக்கு மெய்சிலிர்பூட்டுகிறது.
ரஸ்கொல்நிகொவ் தனது சிறிய அறையில் தன்னை தானே வருத்திக்கொள்ளும் அகப்போராட்டம் நம்மை பதட்டமடைய செய்கிறது.
குற்றம் செய்யப்படுகிறது சூழ்நிலையை சார்ந்தது.

உலகில் நல்லவர்கள் கெட்டவர்கள் என சொல்வதெல்லாம் வெறும் வேம் என நிறுபிக்கிறார்.மேலும் சாதாரணமாணவன் வேடிக்கை பார்ப்பவன்.எதையும் செய்ய துணிபவனே அது (கொலையாகினும்)அவனே தலைவனாகிறான்.என நெப்போலியனை உதாரணமாக காட்டுகிறார்.எந்த ஒரு கொள்கையும் உணர்வின் முன்பு மாய்ந்துவிடும் என்பதே கதையின் நீதி.பொதுவாக இந்த நாவலில் வரும் பெண் கதாப்பாத்திரங்கள் வாழ்வில் பெண்படும் பாடை சித்தரிக்கிறது.உதாரணமாக சோனியாவின் தாயார் காதாப்பாத்திரம் தனது கணவனை இழந்து அந்த குடும்பத்தை காக்க போராடும் குணமும் சில பைத்தியகாரத்தனமும்,காசநோயால் அவள் அவதிப்பட்டு இறந்து போவதும் வேதனையான நிகழ்வாக இருக்கிறது.
சோனியாவின் வாழ்வு அவள் காதாநாயகனின் மீது கொள்ளும் காதல் அத்தனையும் வைத்துப்பார்க்கும் போது சமுகத்தில் நாம் யாரை தீயவர்கள் என வெறுக்கிறோமோ அவர்களின் நன்மதிப்பை சுட்டிக்காட்டுகிறது.இந்த புத்தகம் உளவியல் ரிதியாக ஆராய்ச்சி செய்பவர்களுக்கு பெரும் பொக்கிஷம் எனலாம்.மேலும் கதையும் அதை அகமனதில் அமர்ந்து ஒவ்வொரு காதாப்பாத்திரத்தின் மூலம் தஸ்தோயோவெஸ்கி விவரிக்கும் விதமும் ஒரு சிறந்த அனுபவத்தையும்
வாழ்விற்கான வித்யாசமான புரிதலையும் கற்பிக்கிறது.இந்த நாவல் சமுகத்தின் மீதான என் பார்வையை கொஞ்சம் புரட்டிப்போட்டிருக்கிறது என கூட சொல்லலாம்.

பூனாச்சி புத்தக விமர்சனம்

பூனாச்சி ஒரு வெள்ளாட்டின் கதை அதை நான் பேசித்தான் ஆக வேண்டும்.ஆம் அந்த கதையை எழுதிய பெருமாள் முருகன் ஐய்யாவுக்கு கோடி கும்புடு.

மனுசேன் அணுவணுவா ஆடுகளையும் ஆட்டு மந்தையும் கவனுச்சு எழுதிருக்கார்.மேலும் முக்கியமான விசயம் ஆடைகளுக்கு பெயரெல்லாம் வைத்து ஒரு ஆவணத்தை உருவாக்கியுள்ளார் என சொல்லலாம்.

மந்தையில் ஆடோட்டி சொல்பவர்களிலிருந்து,அதன் புணர்ச்சி முறைகளில் இருந்து ,ஆட்டுக்கு உடை அடைப்பவனுக்கும் இடையான மனிதத்தை
அவர்களின் வாழ்வு முறையையும் ஒரு கிராமத்தானாய் இருந்தும் நான் தெரிந்து கொள்ளாதவையை எழுத்தாளர் எனக்கு சொல்லி தந்தார் எனக்கூட சொல்லலாம்.

நானும் இஞ்சினியர் தா 4 தொடர் கதை

சரி நானே இப்படி பேசிக் கொண்டிருந்தால் எப்படி!!!!!கொஞ்சம் மித்ரனும் உங்களோடு பேசட்டும் என நினைக்கிறான்.
வணக்கம் பாஸ்,நட்பு அப்டிங்கிறது உலகத்தில எதையும் எதிர்பாக்காம இந்த மனுசங்களுக்கு கிடைக்கிற வரம்.அப்டி பட்ட வரத்தை யாரும்
வேணானும் சொல்லவும் முடியாது அனுபவிக்காம இருக்கவும் முடியாது. இன்னைக்கு எங்க காலேஜ் முடியிற நாள் ஆமா எந்த வித கவலையுமில்லாம கடத்துன காலம் முடிவுக்கு வரப்போற நாளுனு சொல்லலாம்.நான் என்னோட இத்துப்போன பாயை தூக்கி எறிஞ்சிட்டு எல்லா பொருளையும் எடுத்து வைச்சிட்டிருந்தேன்.துருவனுக்கும் ராகுலுக்கும் ஏற்கனவே கார் வந்து ரெடியா நிக்கிது.துருவன் ஏன் பக்கத்துல வந்து ரெண்டு புத்தகத்தை குடுத்தான்.
“மச்சா…பாய்டா…நம்ம ரூம விட்டு போறதுதாண்டா கஷ்டமா இருக்கு..இந்த புத்தகத்தை வச்சிக்கோ உனக்கும் படிக்கனும்னு தோனும் போது படி,இதை விட பெரிய பரிசு என்னால உனக்கு தர முடியாது. அடிக்கடி போன் பண்ணனும்.சரி பாய்..அம்மா கூப்புடுராங்க..”என் கையில இருக்கிற அந்த ரெண்டு புத்தகத்தை நான் படிக்க போறதில்லை.
இருந்தாலும் துருவன் ஞாபகமா இருக்கட்டுமேனு எடுத்து வச்சிகிட்டேன்.
கடைசியா எங்க ரூம ஒரு தடவை பாத்தேன்.அதில நிறைய கிறுக்கல்கள் இருக்கு.யேன் பட்டபேர துருவனும் அவன் பட்டபேர நானும் மாத்தி மாத்தி எழுதி வைச்சிருப்போம்.வெளிய போறதுக்கு முன்னாடி கடைசியா அந்த ரூமோட அந்த கெட்ட வாசனையை நல்ல இழுத்துகிட்டேன்.ஆமா அது இனிமே கிடைக்காதுனு தெரியும்.அதனால கூட அந்த வாசனை எனக்கு பிடிச்சுருக்கலாம்.வெளிய வந்து பாத்தா எல்லாரும் அவங்க அப்பா,அம்மா வோட கிளம்பிட்டிருக்காங்க.எனக்கு கடைசியா
கிளாஸ பாக்கனும்னு தோணுச்சு. நான் பேக்க வாட்ச்மேன் ரூமில வச்சுட்டு போனேன்.முன்னமாதிரி கால் லேசா இல்ல நடக்கறது கூட பாரமா தான் இருந்துச்சு.ஒவ்வொரு எட்டும் என் காதுல கேட்டுகிட்டே இருந்துச்சு. நாங்க உக்காந்து சைட் அடிக்கிற பெஞ்சு கூட நான் போகும் போது என்னையே ஏக்கமா பாக்குது. கிளாசுக்குள்ள போன அங்க ஆண்ரோ சார் உக்காந்து யாருமே இல்லாத கிளாஸ் ரூமை விரக்தியா பாத்துகிட்ருக்காரு.
“சார்…என்ன இங்க உக்காந்திருக்கிங்க…
“ஒண்ணுமில்லடா…கொஞ்சம் மனசு சரியில்ல அதான்..அப்படி பேசிக்கிட்டே ஏன் மூஞ்சியை பாத்துகிட்டிருந்தவர்…
” இனிமே நீங்க வரமாட்டிங்கல..நா நடத்துரது புரியலனாலும் புரிஞ்சமாதிரி தலையாட்டிகிற மாட்டிங்கில..போங்கடா போங்க..உங்களமாதிரி நல்ல பசங்க இனிமே வருவாங்களானு தெர்ல பாக்கலாம்.”அவர் கண்களில் கண்ணீர் முட்டி வந்தது.
“சார்…கவலைபடாதிங்க..உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு நல்லது நடக்கமா இருக்க போறதில்ல…இப்டி பேசிகிட்டே அவர் கையை பிடித்து “அடிக்கடி நாங்க உங்கள பாக்க வருவோம் சார்..
அவர் என் கையை எடுத்து விட்டு ஏன் தோல்ல தட்டிக்கொடுத்து வெளியே போனு சொல்லறது மாதிரி திருப்பி விட்டார்.
நானும் ஏதோ என்னை உள்ள விட்டுட்டு அரைகுறையா வெளிய வந்து இனிமே நாங்க
இல்லாத அந்த வகுப்பறை என்ன மாதிரியெல்லாம் வருத்தப்படுமோ தெரியலை.
சில சமயம் அப்படித்தான் உசுருள்ள பொருளுக்கும் உசுறில்லாத பொருளுக்கும்
அன்புனு சொல்ற ஒரு சில மொழி நல்லா தெரிஞ்சுருக்கு.அது ஆட்டி படைக்கிற வேலையில தான் பிரதானமான சில உண்மைகள் வெளிப்படுகிறது.நம்ம நம்மல மறந்து நமக்கு தெரியாத ஒரு புதுசான பயணத்தை தொடங்கபோறமேனு சில சமயம் பயம் வரும்.
அந்த பயம் கூட நம்மள ஒரு ஆட்டு ஆட்டி படைக்கும்.அதுக்கு பயந்து அவன் வாழ்க்கையை தொடங்கிறானு அவனுக்கான முடிவ அவன் தேர்தெடுத்துக்கிறானு தான் அர்த்தம்.இப்படி என்ன என்னமோ மனசுல ஓட மித்ரனோட
நண்பரான வாட்ச்மேன் தாத்தாவை பாத்து
பேசி அவர்கிட்ட வார்த்தையால விவரிக்கமுடியாத
சோகத்தை பரிமாறிக்கிட்டு இனி புதுசான வாழ்க்கை எப்படியிருக்குமோனு புலம்பிக்கிட்டே
நடையை போட்டான்.

பிரமீள்

பிரமீள் எனும் கவிதை ஆளுமையை பற்றித்தான்
உங்களோடு நான் பேச வந்தேன்.நீங்கள் நினைக்கும் அளவிற்கு நான் படிக்கவில்லை.இருந்தும் சில படைப்புகளை படித்திருக்கிறேன்.பிரமீள் ஒரு இலங்கை தமிழர்.
சிறு வயதிலயே தமிழகத்தில் குடிவந்தவர் அவர்.
இவரின் தூரிகையில் வரைந்த ஓவியமும் சரி,
எண்ண தூரிகையில் சிதறிய வண்ண கவிதைகளும் சரி சில குழப்பிய மன நிலையோடு உங்களுக்குள் புகுந்தாலும் அதன் பாதிப்பென்பது
அகச்சிறந்தது.சில மரபு கவிஞர்கள் புதுக்கவிதைகளை எள்ளி நகையாடிய காலத்தில்
இவரின் கவிதைகள் அவர்களுக்கு பதிலடியாய் இருந்தது.செல்லப்பாவின் எழுத்து பத்திரிக்கையில் இவருக்கென தனி அங்கிகாரமுன்று.பிரமீளின் கவிதைகள் அவ்வளவாக யாருக்கும் புரிவதில்லை.எனும் ஒரு வாக்குவாதமுண்டு.அவரின் வார்த்தைகள் தமிழுக்கு புதிதாகவே இருந்தன.உவமைகளும் சரி, கற்பனையும் வார்த்தை அமைப்பும் அப்படித்தான் இருக்கும்.ஒன்றுக்கு மூன்று தரம் படித்தால் மட்டுமே அது புரியும்.அப்படி புரியும்
அந்த கவிதைகள் உங்கள் மனதை சுட்டெரிக்கும் பரிதியாய் ஒளிரும்.இதோ உங்களுக்காக
நான் ரசித்த பிரமீளின் சில கவிதைகள்.
“பறவையின் சிறகிலிருந்து
பிரிந்த இறகொன்று
காற்றின் தீராத பக்கங்களில்
தன் வாழ்வை எழுதுகிறது.”” ஒரு பாப்பாத்தி நகத்தோடுஎன் பறை நகம் மோதி
மனம் அதிர்ந்தது.கோபத்தில் மோதி
கலந்தன கண்கள்.பிறந்ததுஒரு புது மின்னல்.ஜாதியின்கோடை மேவி பொழிந்ததுகருவூர்ப் புயல்…..”காக்கை கரைகிறேதென
பொய்ப்புலம்பல் அது.கடலைலகள் தாவிக் குதித்தல்போலிக் கும்மாளம்.இரும்பு மெஷின் ஒலிகபாலம் அதிரும்.பஞ்சாைலக் கrத்தூள் மைழநுரையீரல் கமறும்.அலமறும் சங்கு இங்கே
உயிர்ப்புலம்பல்.ெதாழிலின்வருவாய்தான் கும்மாளம்.லாப மீன் திrயும்பட்டணப் பெருங்கடல்.தாவிக் குதிக்கும்காrயப் படகுகள்.இயற்ைகக்கு ஓய்வு ஓயாதமகத் சலித்த அதன்பேரழிரவு.”வெண்சுவர்த் திைரயிெலன்தூரிகை புரண்டது.சுவரே மறைந்தது.மீந்தது காட்சி.ஓ ஹோ
உயிர்த்தெழும் ஒளிக்குஇருள் ஒரு திரையா?பாழாம் வெளியும்படைப்பினை வரையவோர்
சுவரா? “
இப்படி இன்னும் நிறைய கவிதைகளை சொல்லிக்கொண்டே போகும்.இவரின் கவிகள் மனதில் பதியாவிடினும் அதன் சாரம் உங்கள் இதயச்சுவரில் வேலுன்றி நிற்க்கும்.ஒரு மனிதன் அவன் உருவத்தை அவனே வரைந்து கொள்ளுமளவு இருக்கிறானெனில் பிரமீள் ஒரு வித்யாச மானுடப்பிறவி எனக்கூறலாம்.

தீரன் சின்னமலை வரலாறு

இன்றைய ஈரோடு மாவட்டத்தில்காங்கயம் வட்டம் சென்னிமலைஅருகிலுள்ள செ.மேலப்பாளையம்என்னும் சிற்றூரில் ஏப்ரல் 17, 1756 அன்று பிறந்தவர்.அவரின் தந்தையார் பெயர் ரத்னசாமி கவுண்டர்(பயிரன் கூட்டம்), தாயார் பெயர் பெரியாத்தா (ஓதாலன் கூட்டம்). இவரின் இயற்பெயர் தீர்த்தகிரி கவுண்டர். இவர் பழைய கோட்டைப் பட்டக்காரர் மரபு என்று கூற படுகிறது. இதனால் இவர் இளம்பருவத்தில் தீர்த்தகிரிச் சர்க்கரை எனப் பெயர் பெற்றார்.

தீர்த்தகிரி இளவயதிலேயே மல்யுத்தம், தடிவரிசை, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சிலம்பாட்டம் போன்ற போர்ப் பயிற்சியை சிவந்தாரையர் என்பார் வழிவந்தவரிடம் கற்றுத் தேர்ந்தார்.கொங்கு நாடு அப்பொழுது மைசூரார் ஆட்சியில் இருந்ததால், கொங்கு நாட்டு வரிப்பணம் சங்ககிரிவழியாக மைசூர் அரசுக்குச் சென்றது. ஒருநாள் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி மைசூர் அரசுக்குச் செல்லும் வரிப்பணத்தைப் பிடுங்கி ஏழைகட்கு விநியோகித்தார். அப்பொழுது, வரி கொண்டு சென்ற வரி தண்டல்காரரிடம் சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல் என்று சொல்லி அனுப்பினார். அதுமுதல் தீர்த்தகிரிக்குச் சின்னமலை என்ற பெயர் வழங்கலாயிற்று என்ற கருத்து பரவலாக உள்ளது.

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் கொஞ்சம் கொஞ்சமாக நாட்டில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று சின்னமலை விரும்பினார். இன்றைய கேரளத்திலும்கொங்கு நாட்டின் சேலம் பகுதியிலும் இருந்த கிழக்கிந்திய கம்பெனிப்படை ஒன்று சேராவண்ணம் இடையில் பெரும் தடையாகச் சின்னமலை விளங்கினார். டிசம்பர் 7, 1782 இல் ஐதரலியின் மறைவிற்குப் பின் திப்பு சுல்தான் மைசூர் சீரங்கப் பட்டணத்தில் ஆட்சிக்கு வந்து கிழக்கிந்தியக் கம்பெனியிரை எதிர்த்துக் கடும் போர் செய்து வந்தார். மாவீரன் சின்னமலை ஆயிரக்கணக்கான கொங்கு இளைஞர்களைத் திரட்டி மைசூர் சென்றார். சின்னமலையின் கொங்குப்படை சித்தேசுவரம், மழவல்லி, சீரங்கப்பட்டணம் போர்களில் திப்புவின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. குறிப்பாக 40,000 வீரர்களோடு மழவல்லியில் போரிட்ட வெள்ளையர் படைகட்குக் கொங்குப்படை பெரும் சேதத்தை உண்டாக்கியது. நெப்போலியனிடம்படை உதவி கேட்டுத் திப்பு சுல்தான்அனுப்பிய தூதுக்குழுவில் சின்னமலையின் மெய்க்காப்பாளர் கருப்பசேர்வையும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசு வெளியிட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு தபால் தலை நான்காம் மைசூர்ப் போரில் மே 4, 1799-இல் கன்னட நாட்டின் போர்வாள் ஆன திப்பு சுல்தான் போர்க்களத்தில் வீரமரணம் எய்திய பின் சின்னமலை கொங்கு நாடு வந்து அரச்சலூர் அருகேஓடாநிலைக் கோட்டை கட்டிப் போருக்குத் தயார் ஆனார். ஏற்கனவே ஏப்ரல் 18, 1792-இல் தான் வாங்கிய சிவன்மலை – பட்டாலிக் காட்டில் வீரர்கட்குப் பயிற்சி அளித்தார். ஆயுதங்கள் தயாரித்தார். ஓடாநிலையில் பிரெஞ்சுக்காரர்துணையோடு பீரங்கிகளும்தயாரிக்கப்பட்டன. தீர்த்தகிரிச் சர்க்கரை உத்தமக் காமிண்ட மன்றாடியார் என்று சின்னமலைதன்னைப் பாளையக்காரராகஅறிவித்துக் கொண்டு கொங்குநாட்டுப் பாளையக்காரர்களை ஓரணியில் சேர்க்க முற்பட்டார். போராளிகளின் கூட்டமைப்பை ஏற்படுத்தி விருப்பாச்சி கோபால நாயக்கர், திப்புவிடம் பணியாற்றிய மராட்டிய மாவீரர் தூண்டாஜிவாக், பரமத்தி அப்பாச்சி ஆகியவர்களோடு இணைந்து ஜூன் 3, 1800 அன்று கோவைக்கோட்டையைத் தகர்த்து அங்கிருந்து லெப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் பட்டாளத்தை அழிக்க கோவைப்புரட்சிக்குச் சின்னமலை திட்டமிட்டார். முந்தியநாளே போராளிகள் அணியில் சிலர் அறிவிப்பின்றிச் சண்டையைத் தொடங்கியதால் கோவைப்புரட்சி தோல்வியுற்றது.

இடையறாத போர் வாழ்விலும் பல கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தார். புலவர் பெருமக்களை ஆதரித்தார். சின்னமலை கோயில் கொடை பற்றிய கல்வெட்டுகள் சிவன்மலை, பட்டாலி, கவுண்டம்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ளன. சமூக ஒற்றுமை சின்னமலையிடம் மிகச் சிறப்பாக விளங்கியது. அவர் கூட்டமைப்பில் கவுண்டர், தேவர், வன்னியர், வேட்டுவர், நாயக்கர், நாடார், தாழ்த்த பட்டோர் மற்றும் இஸ்லாமியர் பலர் இருந்தனர். கருப்பசேர்வை, ஓமலூர் சேமலைப் படையாச்சி, முட்டுக்கட்டைப் பெருமாத்தேவன், ஃபத்தே முகம்மது உசேன் ஆகியோர் பலர் சின்னமலை படையில் முக்கியம் பெற்றிருந்தனர். எப்படியாவது சின்னமலையை ஒழிக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் முடிவு செய்தனர்.போரில் சின்னமலையை வெல்ல முடியாது என்று கண்ட ஆங்கிலேயர் சூழ்ச்சி மூலம், சின்னமலையைக் கைது செய்து சங்ககிரிக் கோட்டைக்குக்கொண்டு சென்று போலி விசாரணை நடத்தி ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிட்டனர். அவருடன் சின்னமலையின் தம்பியர்களும், படைத்தலைவர் கருப்பசேர்வையையும்தூக்கிலிட்டனர்.

கண்டாங்கி

எப்போதும் போல் சென்ரலுக்கு போகும் பஸ்க்காக நகுலன் அங்கே வருவதுண்டு.
பண்ணாட்டு கார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அவனுக்கு சொந்த ஊரோ வேறு.
பசிக்கும் உழைப்புக்கும் வேறு வேறு அர்த்தமில்லை என அவனின் ஒடுக்கு விழுந்த முகம் சொல்லிவிடும் படியே இருந்தது.
மணி ஒன்பதுக்கெல்லாம் வந்து விடும் பஸ் இன்னும் வந்து சேரவில்லை.சென்னையை பொருத்த வரை சரியான நேரத்திற்கு சரியான முறையில் போய் நிற்க முடியாதென்னது தெரிந்த சமாச்சாரம் தானே..
பத்து மணி வேலைக்கு 9.30க்கு போய் கொண்டிருந்தவன் இப்போதெல்லாம் 9.00 மணிக்கு வந்து நின்றுவிடுகிறான்.என்ன செய்வது பத்து நிமிடம் தாமதமானாலும் சம்பளத்தில் கை வைத்து விடுவார்களே சண்டாள பாவிகள்.காலையில் சரியாய் சாப்பிடும் பழக்கமில்லாததால் மன்னிக்கவும் அப்படியும் நேரமில்லாததால் டீ ஒன்றை குடித்திருக்கிறான்.அந்த டீ வயிற்றில் ஏதோ அரிப்பெடுத்துக் கொண்டிருக்கிறது.
15பீ பஸ் வந்து நின்றது.முட்டிமோதி ஏறி விட்டாச்சு. மேல் கம்பியை பிடித்து கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு பதற்றம் நிதானத்தை தின்று கொண்டிருந்தது.நடத்துனர் பையை குழுக்கி குழுக்கி சில்லரைகளை தேடிக்கொண்டிருக்க அவன் பாக்கெட்டில் வைத்திருந்த மாதாந்திர பயண அட்டையை எடுத்துக்கொண்டான்.
“கொஞ்சம் உள்ள போங்க மா!!!!உள்ளாத அவ்ளோ இடம் இருக்கே இங்கயே நின்னா எப்படி”
என அவளையும் சிலரையும் உள்ளே போக சொன்னார் அவர்.
காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டே குட்டிப்புன்னகையோடு அவள் சன்னல் தரும் காற்றை வாங்கி கொண்டாள்.
கொஞ்சம் மாநிறமாகத்தான்்.பொம்மையோடு தொங்கும் கைப்பையை பார்த்தால் கொஞ்சம் பணக்காரி போலத்தான் தெரிகிறது.
தற்செயலாக நகுலன் அந்த மின்மினிபூச்சி கண்ணை பார்த்து மெய் தொலைத்தான் போல
நோண்டிக் கொண்டிருந்த செல்போனை பாக்கெட்டில் வைத்து விட்டு மீதமிருக்கும் பிறை முகத்தை பார்க்க எத்தனிக்கிறான். ்.கலைந்து போன தலையை சரி செய்து கொண்டே இருமல் ஒன்றை செய்ததும் திரும்பி பார்த்ததும் ஈ…என சிரிக்கிறான்.என்னாடா சிரிப்பென்து போல பயந்து நகர்ந்து நிற்கிறாள்.சென்ரல் வந்ததும்
முட்டி மோதி இறங்கிய நகுலனை முன் வழியாக இறங்கும் அவள் ஓர கண்ணால் தேடிவிட்டு குசும்பு நகையொன்றை தந்து விட்டு நகர்கிறாள்.
இப்படியாய் இரு முகமும் சிரிப்பதும் புலம்புவதும் வாரம் நகர்த்துகிறது.
சனிக்கிழமை என்பதால் பஸ்சில் கூட்டம் கொஞ்சம் மந்தமாகத்தான் இருந்தது. முன்பே எழுதி வைத்திருந்த அவன் நம்பரை கொசக்கி அவள் மடியில் விழும்படி எரிந்து விட்டு சைகையில் எச்சரிக்கிறான்.
பிரித்து பார்த்தவள் காகிதத்தை கோபமாக கிழித்து சன்னல் வழியே எரிந்து விட்டு நகுலனை பார்க்காமல் இருக்கிறாள்.
சோகத்தோடு அந்த நாளை கழித்தவன் கட்டிய லுங்கியோடு ஜட்டியை அலசும் போது போன் வருகிறது.புது நம்பராக இருந்ததால் யோசித்து கொண்டே அட்டன் செய்து பேசுகிறான்.அங்கே எந்த பதிலும் இல்லை. போன் நின்று விட்டது.
மீண்டும் அழைக்க போகும் போது குறுந்தகவல் ஒன்று வந்து விழுகிறது.
அதில் “நீ பேப்பரை எரிஞ்சயே நான் தா அது”
“ஓ…..நீ தானா???ஒரே சர்ப்ரெஸா இருக்கு…
என டைப் செய்து விட்டு பதிலுக்கு காத்திருந்த அவனுக்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆகியும் பதில் வராததால் போன் அடித்து பார்த்தும்
அட்டன் செய்ய வில்லை.
கால் மணி நேரத்திற்கு பிறகு ஒரு குறுஞ்செய்தி
“கால் பண்ணதா..உன் கூட மட்டுமில்ல யாரு கூட பேசுற குடுப்பனையும் எனக்கில்லை.
ஐ எம் டேப் அன்ட் டம் “
இந்த செய்தியை படித்த அவன் கண்கள் வெளியே போய் வா என கொஞ்சம் கண்ணிரை அனுப்பி வைத்தது.அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இவனிடம் இருந்து எந்த பதிலுமில்லை.
பிறகு என்ன நினைத்தானோ….
“பேசுறதுக்கு வாயால மட்டும் தா முடியுமா??
கண் இருக்கே அது போதும் எனக்கு”என குறுஞ்செய்தி அனுப்பியாயிற்று.
அடுத்த நொடியே
இதய சிம்பலோடு பதிலும் வந்து சேர்ந்தது.

நானும் இஞ்சினியர் தா…(3)

அன்று கொஞ்சம் மேகம் அழுதுகொண்டே பூமியை அழகாக்கி கொண்டிருந்தது. வகுப்பறையின் ஜன்னல்கள் சாரல்களை உள்ளே தெளித்து விளையாடின.எப்போதும் பிச்சை காரனின் தட்டைபோல் சத்தமிடும் அந்த அறை இவ்வளவு பேரமைதியாக இருப்பது எப்போதாவது தான்.அதன் அமைதிக்கு பின்னால் எத்தனை வலிகளோ…மாணவர்கள் கரும்பலகையை பார்த்த வாரே கடந்த கல்லூரிகாலத்தை நினைத்துகொண்டிருக்கலாம்.பிரியா விடை என வரையப்பட்ட பலகையில் அப்படி என்னதான் இருக்குமோ இப்படி பார்க்கிறார்கள்.டக்…டக்…
என ஷீ சத்தம்.”ஆண்ரோ”சார் உள்ளே வந்தார்.
இவர்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்.
“ஹாய்…காய்ஸ்…”அங்கே ஒரே அமைதி
“இன்னைக்கு உங்க வாழ்க்கையில ரொம்ப முக்கியமான நாள்.அதாவது பேரவெல் டே…..
இவ்ளோ நாள் எப்டியெல்லாமோ சந்தோசமா இருந்திருக்கிலாம்.இனி மேல் தான் உங்க வாழ்க்கையில நீங்க தனிச்சு நிக்க போறிங்க..
உங்க அப்பா அம்மா இனிமே உங்க தயவ எதிர்பாக்கலாம்.நீங்க உங்க விளையாட்டு தனத்த
ஏங்கிட்ட காட்டுன மாதிரி நீங்க வேலை செய்ற இடத்துல காட்ட கூடாது.காட்டவும் முடியாது.”

“சரிநம்ம கிளாஸ்ல எத்தனை பேருக்கு வேலை கிடைச்சிருக்கு கை தூக்குங்க….”
வகுப்பில் முப்பத்திஆறு கைகள் திமிராய் உயர்ந்து நிற்கிறது.மீத முகங்கள் தலையை குனிந்து அவமான வணக்கம் போட்டுக் கொண்டது.

“ட்ஸ் ஓகே…பரவால…இந்த பேஞ்ல தான் நிறைய பேரு செலக்ட் ஆகிறிக்கிங்க…வாழ்த்துக்கள்.”
வேலை கிடைக்காதவங்க யாரும் கவலை பட வேண்டியதில்லை.வெளிய போன நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கு.எப்டியும் வேலை வாக்கிறலாம்.ஆனா கொஞ்சம் கஷ்டபடணும் அவ்ளோதா…”என சொல்லிய வாரே சோகத்தில் சுருண்டு கிடக்கும் அந்த முகங்களை பார்க்கிறார்.
“டேய்..சந்தோஷ் ரெப்பு வாடா மேல வந்து காலேஜ் லைப்ப பத்தி உன்னோட அனுபவத்த ஹேர் பண்ணிக்கடா..என கொஞ்சும் கோபத்தோடு சொல்கிறார் ஆண்ரோ..

சந்தோஷ் மேடையில் தயக்கத்தோடு நின்றவாரே…

“ஹாய்..எனக்கும் கொஞ்சம் வருத்தமாத இருக்கு…என்னபேசனும்னு தெரியல…
நல்லா என்ஜாய் பண்ணேன் இந்த நாலு வருசம்.இந்த கிளாஸோட ரெப்ப இருந்ததால என்ன நிறைய காலாச்சிருக்கிங்க..இட்ஸ் ஓகே..
அதுவும் ஜாலியாத இருந்துச்சு.அப்பறம் நல்லா படிச்சேன்.நல்ல மார்க் எடுத்தேன்.நல்ல சப்போர்ட்
பண்ணாங்க ஆன்ரோ சார்.அவர ஏன் வாழ்க்கையில மறக்கவே மாட்டேன்.கேம்பஸ் இன்டர்வுல வேலையும் கிடைச்சது. ரொம்ப சந்தோசமா இருக்கு.நம்ம எப்பவும் ஒண்ணா இருப்போம்.பாய்….”சந்தோஷ் மைக்கை துருவனிடத்தில் கொடுத்து விட்டு உக்காந்து கொண்டான்.

துருவன் எந்த வித முகபாவனையும் இல்லாமல்
பேச துவங்கினான்.

“இந்த லைப் எல்லாருக்கும் கிடைச்சுருக்குமா இல்ல..கிடைச்சுருக்காது.நிறைய பேரு படிக்கவே வாய்ப்பில்லாம இருக்காங்க..சோ அவங்கல ஒப்பிட்டு பாத்தோம்னா நம்ம கொஞ்சம் மேல தான்.நம்ம அந்த வாழ்க்கைய சரியா யூஸ் பண்ணிக்கணும்..உங்களுக்கு பிடிச்ச வேலைய செய்ங்க உங்களுக்கு பிடிச்ச மாதிரியும் வாழ கத்துக்கங்க..அதும் ஒன்னும் அவ்ளோ கஷ்டலாம் இல்ல…நிறைய பணம் சாம்பாரிங்க..ஆனா அதை எல்லாம் நீங்களே அனுப்பவிக்கனும்னு நினைக்கிறது தப்பு.நம்ம எங்க இருந்தாலும் டச்ல இருப்போம். நன்றி..”

விக்னேஷ் மைக்கோடு…

“மச்சான்ஸ் வணக்கம்..

நான்லா பாதி நாள் கிளாசிக்கே வந்ததில்லை.மொத்தம் இன்னும் பண்ணெண்டு அரியர் இருக்கு.படிப்பு ஏன் தலைக்கு ஏறுனதே இல்லை.ம்ம்ம்…எப்டி யெறும் எப்ப பாத்தாலும் கிரிக்கெட் கிரிக்கெட் தான்.எந்த பால எப்டி அடிக்கலாம்…என்ன ஷாட் ஆடலாம் இந்த நினைப்பு தா எப்பவும்.காலேஜ் என்ன ஒரு நல்ல கிரிக்கெட் பேட்ஸ்மேனா மாத்திருக்கு.நா நல்ல பிளேயாரா வருவேனு நினைக்கிறேன்.அப்பறம் பசங்களோட இருந்த சில மறக்கமுடியாத விசயம் நிறைய இருக்கு.அது இங்க சொல்ற மாதிரி இருக்காது.எனிவே..தேங்கஸ்.'”

இப்படி எல்லாரும் அவர்களின் நினைவுகளை பாரிமாறிக்கொண்டிருந்த தருணத்தில் மித்ரனின்
கைக்கு வந்தது மைக்.மேடை என்றாலே அவனுக்கு பயம் தான்.நெற்றி வியர்க்க துவங்கியது.மைக்கை பிடித்து நடுங்கும் கையை கொஞ்சம் இருக பிடித்து கொண்டு பேச துவங்கினான்.

“வணக்கம்…
காலேஜ் முடிஞ்சுருச்சுனு சொல்றாங்க என்னால சத்தியமா நம்ப முடியல…இப்பதே சேந்த மாதிரி இருக்கு.ம்ம்ம்ம்…நா தமிழ் மீடியம்ல படிச்சு வந்தவேன்.முதல வந்து கிளாஸ் நடத்தும் போது ஒன்னும் புரியலை.கண்ண கட்டி காட்ல விட்டமாதிரி இருந்துச்சு.எலவு ஒன்னும் புரியல.அப்பறம் மேக்ஸ் அதில அரியர்.இன்னும் இருக்கு.எனக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க..நா ஒரு ஏழைபையன் அப்படினு பாக்காம ஏன்கூட அவ்ளோ பாசமா இருந்தாங்க.
என்னால பீஸ் கட்டமுடியாத சூழ்நிலையில அவங்க தான் உதவி பண்ணாங்க.அவங்களுக்கு நன்றி.
ஹாஸ்டல்ல நிறைய சேட்டை பண்ணிருக்கேன்.அது ஊர் குசும்பு.நிறைய டிரிப் போயிருக்கோம்.ஏங்கிட்ட பணமே கேட்காம என்ன கூப்பிட்டு போவாங்க…நல்லா வாழ்க்கைய என்ஜாய் பண்ணேன்.வேலை கிடைக்கல பராவாயில…எப்டியும் வேலை வாங்கிறுவேனு நம்பிக்கை இருக்கு. எப்பவும் மறக்காம இருக்கலாம்.அடிக்கடி போன் பண்ணிபேசிக்கலாம்.நம்ம நட்பு தொடரணும்.
நன்றி…
முடிவு என்பது சில நேரத்தில் சோகமாகவும்,சுவையாகவும் இருக்கும்.ஆனாலும் இங்கே இரண்டும் கலந்திருந்தது தான் ஆச்சரியமாக இருந்தது.

தொடரும்….

நானும் இஞ்சினியர் தான்-அக்னிமித்ரன் -2

இருள் கல்லூரியின் விடுதியை விசாரித்துகொண்டிருக்கிறது.கட்டமாக வரிசையாக அறைகளின் அணிவகுப்பை கொண்ட விடுதியின் நடுவே வாலிபால் விளையாடிக்கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.
மாலையில் வீடு வந்து சேர்ந்த காகாங்களின் கூச்சத்தை போல ஒரே சலசலப்பு.வாழ்வின் மறக்க முடியாத நினைவுகளை தரக்கூடிய நாட்கள் அவை.அறை எண் 307ல் மித்ரன் தனெக்கே அடையாளமான கட்டம்போட்ட லுங்கியை கண்டிக்கொண்டு ஒட்டை விழுந்த வெள்ளைபனியனை ஒடுங்கிய மார்பால் மறைத்து அவனில் இரும்பு கட்டிலில் பாயை விரித்து உக்காந்திருக்கிறான்.

“ஹாய் மாம்..ஐ காட்ட ஜாப் இன் அசஞ்சர் மேம்”…
என பொன்னிற புன்னகையோடு கண்ணாடியை
பெருவிரலால் சரிசெய்துகொண்டே அஷ்வின் பேசுகிறான்.
“ம்ம்ம்….மெக்கானிக் படிப்பாறாம்…அப்பறம் சாப்ட்வேர் கம்பேனிக்கு வேலைக்கு போவாறாம்.
அப்பறம் என்னா மயித்துக்கு டா இவன்லா படிக்க வரான்…என அவன் காதுக்கு விளாதபடி துருவன்
மித்ரனிடம் அசக்கி மொழியில் உரைக்கிறான்.
துருவன் இந்த மூவரில் கொஞ்ச வித்தியாசமானவன் தான்.அவன் அப்பா ஒரு போட்டாகிராபர்.திரண்ட உடல் வாகுடன் வெள்ளையாக பார்பப்தற்கு ஹிந்தி நடிகரை போலவே இருப்பான்.இதில் கூத்து என்னவென்றால் அவனுக்கு பெண் தோழிகளே யாருமில்லை என்பது தான்.எப்போதும் எதாவது புத்தகத்தை புரட்டி கொண்டிருப்பது தான் அவனுக்கு பொழுதுபோக்கு. அவனுக்கு மார்க்கிச கோட்பாடுகள் மீது அளவு கடந்த ஈடுபாடு.லெனின்,மாவோ,பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரா,ஸ்டாலின்,மார்க்ஸ் என இப்படி யாரையாவது பற்றி பேசிச்கொண்டே இருப்பான்.அதுவும் அவன் சொல்வதை புரிந்து கொள்பவர்களிடம் மட்டும் தான் அவன் பேச்சு எப்போதும் இருக்கும். கையில் இப்ப யேதோ
தாய் என்ற புத்தகத்தை படித்துகொண்டிருந்தான்.நல்ல வசதிய குடும்பத்தை சேர்ந்தோன் தான். அப்படி அவன் உடைகள் இருந்தாலும் ஒரு நாளும் அவன் பேச்சிலோ செயலிலோ இருக்காது. மற்றவர்களிடமிருந்து எப்படியும் தனித்திருப்பதே அவனின் சிறப்பு.
“எந்த வேலையா இருந்தா என்னடா..நல்ல சம்பளம் கெடச்சா போதாதா….”
“மித்ரா…அப்படி பணத்துக்காக நம்மல நம்மலே மாத்திகிட்டு இருந்தா நம்ம நம்மலா வாழுற
வாழ்க்கை இழந்துருவண்டா..கிட்டதட்ட இவனுக்கும் அப்படி நிலைமை வரும்.
“போடா !!!!காசுக்காக என்னவேணும்னா பண்ணலாம்டா…என்றான் மித்ரன்.
“ம்ம்ம்..உனக்கு போக போக புரியும் என சொல்லி விட்டு மீண்டும் புத்தகத்தை எடுத்து வைத்து உக்காந்தான்.
அஷ்வின் அம்மாவிடம் பேசிவிட்டு ஸ்பிக்கரில் பிட்புள் பாட்டு போட்டு தலையாட்டிக்கொண்டே
கூடவே பாடினான்.அந்த சத்தம் புத்தகம் படித்து கொண்டிருந்த துருவனுக்கு எரிச்சலாக இருந்தது.
புத்தகத்தை படார் என மூடி வைத்துவிட்டு படுத்துகொண்டான்.
மித்ரனுக்கு போன் வந்தது. போனின் மேல் கண்ணாடி உடைந்திருந்ததால் அவனால் போனை அட்டன் செய்ய முடியவில்லை.விரலை வைத்து இழுத்து இழுத்து பார்க்கிறான் ஒன்றும் ஆனா பாடில்லை. படார் என ஒரு தட்டு தட்டியது அட்டனாகிவிட்டது.
“ம்மா… சொல்லுமா…
“சாப்டியா???
“ம்ம்..நீமா??
“சாப்டேன்.இன்னைக்கு வேலைக்கு ஆளெடுக்க வராங்கனு சொன்னயே என்ன ஆச்சு???
“வந்தாங்கமா…கடைசி ரவுண்டு வரைக்கும்
போயிட்டேமா…கடைசில தாமா பெயிலாகிட்டேன்.
“”சரி,சரி விடு,இன்னும் ஒரு மாசந்தே இருக்கு..
எப்டியாச்சும் வாங்கிரு..கடன புடன வாங்கி உன்னைய படிக்க போட்ருக்கு.எப்படியாச்சும் வேலை வாங்கிரு…
“சரி மா…வைமா..என போனை தூக்கி உடையாதது போல தலையணை மீது எறிந்தான்.
தொட்டை குழியில் அவனின் படிப்புக்கு அடுத்த
படியான நாட்களை நினைத்து தீ எரிகிறது.
“அடுத்த நாள் காலையில் வகுப்பறையில்
மெக்கானிக்கல் பிரிவை சேர்ந்த எழுபது பேரும்
அரங்கத்தில் அமந்திருக்கிறார்கள்.
” யாரோ!!!!சீப் கெஸ்ட் கிலாஸ் எடுக்குறாங்களாமா….ஓ வென கேட்டுகொண்டான் மித்ரன்.
கருப்பு கலர் கோட்டுபோட்டு வெளீர் என ஒரு கண்ணாடி போட்ட பிண்டம் ஒன்று வந்து பேசிக்கொண்டிருந்தது.அப்படி என்னதான் பேசுவாரோ…ஒன்னும் புரியவில்லை என மித்ரன்
புலம்புவது முகத்தில் தெரிந்தது.இப்படி எவனாவது கண்ணாடி அறையில் நாளு வார்த்தை இங்கிலிஷில் பேசிகொண்டால் அவன் பெரியால் என நினைத்து கொண்டான்.
துருவன் அவன் வாயிலிருந்து வார்த்தைகள் சிதறக்கூடாது என்பதற்காக மித்ரன் காதுக்கு போகும்படி கையால் பாதை அமைத்து
“டேய்…டிசைன் பத்தி இவனுக்கு ஒன்னும் தெரியலடா..சும்மா அவங்க கம்பேனிய பத்தி பீட்டர் விட்டிட்டு இருக்காண்டா”என்றான்.
ஆம் நம் இந்தியர்கள் இன்னும் துரைமார்களின் ஆட்சியிலிருந்து விடுபடவில்லை.தஸ்…புஸ் என பேசுபவனைத்தான் இந்த சமுகம் மதிக்கிறது.நிறைய திறமைசாலிகள் கூட ஆங்கில மோக கிறுக்கர்களுக்கு பயந்து
கூடுக்குள் ஒளியும் ஆமையாகத்தான் இருக்கிறார்கள் என அவனுக்கு தோன்றியது.

Design a site like this with WordPress.com
Get started