இணையத்தில் தமிழ் எழுத்தாளர்களை பற்றி பார்க்கும் போது நகுலன் என்ற பெயர் எனக்கு சிக்கி விட்டது. சரி யார் தான் இவர் என தேட தொடங்கினேன்.அவரின் கவிதை நூலை  விரித்து என் மடியின் மீது அமர சொல்லி வாசிக்க துவங்கினேன்.அவரையும்  கவிதையையும் விசாரிக்கத்   துவங்கும் போது வரிகள் நெஞ்சுக்குள் ஏறி அமர்ந்து கொண்டு இறங்க மறுத்து அடம் பிடிக்கின்றன . அவை  கொட்டுத்  தாளம் போட்டு என்னை ஏளனம் செய்கின்றன . இப்படி ஒரு கவிஞனை ஏன் விட்டேன் என புலம்பி கொண்டேன்.  நான்…. நான்.. இது எனக்கான உலகம் அதில் நான் உலாவிக்கொண்டு இருக்கிறேன் என்னோடு நான் சண்டை போடும்போது புது புது அர்த்தங்கங்கள் குதிக்கின்றன அதை இழுத்து பிடித்து கழுத்தை நெரித்து கவிதை செய்கிறேன் என்கிறார்  நகுலன் . எனக்கு  பெரும் சந்தேகம் எழுகிறது எனக்கு அவரின் சுயத்தோடு பேசுவதே அவரின் நிதப்பொழுது  போக்குகாக இருக்குமோ என்று  . இவர் கவிதைகள் விமர்சனங்களுக்கு அஞ்சாதவை, இலக்கணத்திடம் கெஞ்சதாவை .இவரின் கவிதைகள் எளிமையான வார்த்தைகளால் ஆனது ஆனால் நெஞ்சுக்குள் நின்று நோண்டிக்கொண்டே ஏதோ ஒரு சாயத்தை அள்ளிபூசி மொழுகக்கூடியவை போதும் நிறுத்தி விடுகிறேன் இன்னும் அந்த உணர்வுகள் விட்டு போனதாய் இல்லை.இதோ அவர் எழுதிய கவிதையில் எனக்கு பிடித்த சில அனல்கங்குகள்

செத்த வீட்டில்
துக்கம் விசாரிக்கச்
சென்று திரும்பியவர்
சொன்னார்
“செத்த வீடாகத்
தெரியவில்லை
ஒரே சந்தை இரைச்சல்”

        *

வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
”யார்”
என்று கேட்டேன்
”நான் தான்
சுசீலா
கதவைத் திற “என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?
*

எந்தப் புத்தகத்தைப்
படித்தாலும்
நமக்குள் இருப்பதுதான்
புஸ்தகத்தில்
எழுதியிருக்கிறது;
அதை மீறி ஒன்றுமில்லை!
*
இருப்பதற்கென்றுதான்
வருகிறோம்.
இல்லாமல்
போகிறோம்!
*

என்னைப் பார்க்க வந்தவர்
தன்னைப் பார்
எனச் சொல்லிச் சென்றார்!
*
மிகவும் நாணயமான மனிதர்
நாணயம் என்றால் அவருக்கு உயிர்!
*

எனக்கு
யாருமில்லை
நான்
கூட!

யாருமில்லாத பிரதேசத்தில்
என்ன நடந்துகொண்டிருக்கிறது?
எல்லாம்!

முக்கோணம்
முடிவில்
ஒரு ஊசி முனை ஞானம்!

இதோ இப்படி தான் கொஞ்சமாக எழுதி இருந்தாலும் கொழுத்தும் அர்த்தத்தை கக்கிவிடுவதில் வல்லவராக இருக்கிறார்.ஒவ்வொரு முறை பத்திரிக்கைக்கு கவிதை அனுப்புவர் .பிடிக்க வில்லை என்றால் திருப்பி அனுப்பி விடுங்கள் சும்மா நீங்கள் போடும் வரை என்னால் காக்க முடியாது. என கோபமாக பேசக்கூடியவர். அவரின் கவிதைகளில் தனிமையும் சுசிலாவின் காதலும் மனிதமும் கொட்டிக் கிடக்கிறது. இதோ என் மீதுள்ள தாக்கத்தை தணித்துக் கொள்ளத்தான் உங்களுக்காக  இப்பதிவை தரவிறக்கியுள்ளேன் .

                             
—-அக்னி மித்ரன்

Published by sibi saravanan

இதயம் சொல்வதை இறுக பிடித்து எழுதி தொலைக்கிறேன் ......

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started