கண்டாங்கி

எப்போதும் போல் சென்ரலுக்கு போகும் பஸ்க்காக நகுலன் அங்கே வருவதுண்டு.
பண்ணாட்டு கார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் அவனுக்கு சொந்த ஊரோ வேறு.
பசிக்கும் உழைப்புக்கும் வேறு வேறு அர்த்தமில்லை என அவனின் ஒடுக்கு விழுந்த முகம் சொல்லிவிடும் படியே இருந்தது.
மணி ஒன்பதுக்கெல்லாம் வந்து விடும் பஸ் இன்னும் வந்து சேரவில்லை.சென்னையை பொருத்த வரை சரியான நேரத்திற்கு சரியான முறையில் போய் நிற்க முடியாதென்னது தெரிந்த சமாச்சாரம் தானே..
பத்து மணி வேலைக்கு 9.30க்கு போய் கொண்டிருந்தவன் இப்போதெல்லாம் 9.00 மணிக்கு வந்து நின்றுவிடுகிறான்.என்ன செய்வது பத்து நிமிடம் தாமதமானாலும் சம்பளத்தில் கை வைத்து விடுவார்களே சண்டாள பாவிகள்.காலையில் சரியாய் சாப்பிடும் பழக்கமில்லாததால் மன்னிக்கவும் அப்படியும் நேரமில்லாததால் டீ ஒன்றை குடித்திருக்கிறான்.அந்த டீ வயிற்றில் ஏதோ அரிப்பெடுத்துக் கொண்டிருக்கிறது.
15பீ பஸ் வந்து நின்றது.முட்டிமோதி ஏறி விட்டாச்சு. மேல் கம்பியை பிடித்து கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு பதற்றம் நிதானத்தை தின்று கொண்டிருந்தது.நடத்துனர் பையை குழுக்கி குழுக்கி சில்லரைகளை தேடிக்கொண்டிருக்க அவன் பாக்கெட்டில் வைத்திருந்த மாதாந்திர பயண அட்டையை எடுத்துக்கொண்டான்.
“கொஞ்சம் உள்ள போங்க மா!!!!உள்ளாத அவ்ளோ இடம் இருக்கே இங்கயே நின்னா எப்படி”
என அவளையும் சிலரையும் உள்ளே போக சொன்னார் அவர்.
காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டே குட்டிப்புன்னகையோடு அவள் சன்னல் தரும் காற்றை வாங்கி கொண்டாள்.
கொஞ்சம் மாநிறமாகத்தான்்.பொம்மையோடு தொங்கும் கைப்பையை பார்த்தால் கொஞ்சம் பணக்காரி போலத்தான் தெரிகிறது.
தற்செயலாக நகுலன் அந்த மின்மினிபூச்சி கண்ணை பார்த்து மெய் தொலைத்தான் போல
நோண்டிக் கொண்டிருந்த செல்போனை பாக்கெட்டில் வைத்து விட்டு மீதமிருக்கும் பிறை முகத்தை பார்க்க எத்தனிக்கிறான். ்.கலைந்து போன தலையை சரி செய்து கொண்டே இருமல் ஒன்றை செய்ததும் திரும்பி பார்த்ததும் ஈ…என சிரிக்கிறான்.என்னாடா சிரிப்பென்து போல பயந்து நகர்ந்து நிற்கிறாள்.சென்ரல் வந்ததும்
முட்டி மோதி இறங்கிய நகுலனை முன் வழியாக இறங்கும் அவள் ஓர கண்ணால் தேடிவிட்டு குசும்பு நகையொன்றை தந்து விட்டு நகர்கிறாள்.
இப்படியாய் இரு முகமும் சிரிப்பதும் புலம்புவதும் வாரம் நகர்த்துகிறது.
சனிக்கிழமை என்பதால் பஸ்சில் கூட்டம் கொஞ்சம் மந்தமாகத்தான் இருந்தது. முன்பே எழுதி வைத்திருந்த அவன் நம்பரை கொசக்கி அவள் மடியில் விழும்படி எரிந்து விட்டு சைகையில் எச்சரிக்கிறான்.
பிரித்து பார்த்தவள் காகிதத்தை கோபமாக கிழித்து சன்னல் வழியே எரிந்து விட்டு நகுலனை பார்க்காமல் இருக்கிறாள்.
சோகத்தோடு அந்த நாளை கழித்தவன் கட்டிய லுங்கியோடு ஜட்டியை அலசும் போது போன் வருகிறது.புது நம்பராக இருந்ததால் யோசித்து கொண்டே அட்டன் செய்து பேசுகிறான்.அங்கே எந்த பதிலும் இல்லை. போன் நின்று விட்டது.
மீண்டும் அழைக்க போகும் போது குறுந்தகவல் ஒன்று வந்து விழுகிறது.
அதில் “நீ பேப்பரை எரிஞ்சயே நான் தா அது”
“ஓ…..நீ தானா???ஒரே சர்ப்ரெஸா இருக்கு…
என டைப் செய்து விட்டு பதிலுக்கு காத்திருந்த அவனுக்கு ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆகியும் பதில் வராததால் போன் அடித்து பார்த்தும்
அட்டன் செய்ய வில்லை.
கால் மணி நேரத்திற்கு பிறகு ஒரு குறுஞ்செய்தி
“கால் பண்ணதா..உன் கூட மட்டுமில்ல யாரு கூட பேசுற குடுப்பனையும் எனக்கில்லை.
ஐ எம் டேப் அன்ட் டம் “
இந்த செய்தியை படித்த அவன் கண்கள் வெளியே போய் வா என கொஞ்சம் கண்ணிரை அனுப்பி வைத்தது.அடுத்த மூன்று மணிநேரத்திற்கு இவனிடம் இருந்து எந்த பதிலுமில்லை.
பிறகு என்ன நினைத்தானோ….
“பேசுறதுக்கு வாயால மட்டும் தா முடியுமா??
கண் இருக்கே அது போதும் எனக்கு”என குறுஞ்செய்தி அனுப்பியாயிற்று.
அடுத்த நொடியே
இதய சிம்பலோடு பதிலும் வந்து சேர்ந்தது.

Published by sibi saravanan

இதயம் சொல்வதை இறுக பிடித்து எழுதி தொலைக்கிறேன் ......

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started